லோம ரிஷி குகை
லோம ரிஷி குகை (Lomas Rishi Cave), இந்தியாவின் பிகார் மாநிலத்தின் ஜகானாபாத் மாவட்டத்தில் சுல்தான்பூர் எனுமிடத்தில் அமைந்த பராபர் மலையில் அமைந்த குடைவரைக் குகை ஆகும். இது கிமு 3-ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தின் போது ஆசீவகம் அல்லது பௌத்த பிக்குகள் தியானம் செய்வதற்காக கொடையாக நிறுவப்பட்ட செயற்கை குகை ஆகும். [2][3][1]லோம ரிஷி குகையின் முகப்பு குதிரை லாட வடிவில் அமைந்துள்ளது.[4] இதே போன்று அசோகர் இப்பகுதியில் பல குடைவரைக் குகைகள் அமைத்து துறவிகளுக்கு தானமாக கொடுத்துள்ளார். இதே போன்று இப்பகுதிகளில் அசோகர் காத்வா, கோபிகா குகை மற்றும் வடாதிகா குடைவரைகளை நிறுவினார். லோம ரிஷி குகை மற்றும் இதனருகே அமைந்த சுதாமா குகையின் குதிரை லாட வடிவ வாயில் முகப்பு போன்றே, மேற்கு தக்காணத்தின் புணே மாவட்டத்தில் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் நூற்றாண்டு முடிய காலத்தில் நிறுவப்பட்ட பாஜா குகைகள் மற்றும் கர்லா குகைகள் அமைந்துள்ளது.[5] லோம ரிஷி குகைக் குடைவரையின் நடுவில் செவ்வக வடிவில் 9.86x5.18மீட்டர் அளவில் பெரிய மண்டம் உள்ளது. உள்ளே அமைந்த இரண்டாவது சிறிய மண்டபம், அரைக்கோள வடிவில் உள்ளது.[6] இக்குகையில் உள்ளறையின் தரை மெருகூட்டப்பட்டுள்ள்து.[7] ![]()
அனந்தவர்மனின் கல்வெட்டுகள் (கிபி5-6வது நூற்றான்டு)கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டு காலத்தில் பிந்தைய மௌகரி வம்ச மன்னர் அனந்தவர்மன் என்பவர் பராபர் மலையில் உள்ள லோம ரிஷ் குகைகள், காத்வா, கோபிகா குகை மற்றும் வடாதிகா குகைகளில் இந்து சமயக் கல்வெட்டுகள் பொறித்தார்.[8]
இதனையும் காண்கஅடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia