குஸ்தி (2006 திரைப்படம்)குஸ்தி (Kusthi) இராஜ் கபூர் இயக்கத்தில், 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இந்நகைச்சுவைத் திரைப்படத்தில் பிரபு, கார்த்திக், வடிவேலு, புளோரா, விஜயகுமார், ராதாரவி ஆகியோர் நடித்திருந்தனர். எம். ஞானசுந்தரி தயாரிப்பில், டி. இமான் இசை அமைப்பில், 2006 சூன் 23 அன்று இப்படம் வெளியானது. இப்படம் ஒரு சராசரி வெற்றிப் படமாக அமைந்தது.[1][2] கதைச்சுருக்கம்நாட்டாமையின் (ராதாரவி) மகளைத் திருமணம் செய்ய பயந்து, ஊரை விட்டு சென்னைக்கு ஓடும் ஜீவா (பிரபு), தன் நண்பன் வேலுவுடன் (வடிவேலு) இணைகிறான். அந்நிலையில், சில உள்ளூர் அடியாள்களிடமிருந்து ஒரு நபரைக் (மகாநதி ஷங்கர்) காப்பாற்றுகிறான் ஜீவா. அந்தக் காப்பாற்றப்பட்ட நபர், இரவுடி சிங்கத்திற்கு (கார்த்திக்) மிகவும் வேண்டப்பட்ட ஆள். பின்னர், சிங்கத்தை அபியும், ஜீவாவை திவ்யாவும் காதல் செய்கின்றனர். சிங்கத்திற்கு மற்றொரு இரவுடிக்கும் (ராஜ் கபூர்) பணப் பிரச்சனை இருக்கிறது. அதே நேரம், ஜீவாவைத் தேடிச் சென்னைக்கு ஆள்களுடன் வருகிறார் நாட்டாமை. மருத்துவமனையில், ஜீவாவைக் காணாமல் போன பேரன் என்று தவறாக அடையாளம் காணுகிறார் இலட்சுமியின் (லதா) தந்தை (விஜயகுமார்). நாட்டாமையிடம் இருந்து தப்பிக்க, இலதாவுடன் ஊட்டிக்குச் செல்கிறான் ஜீவா. அபி மற்றும் திவ்யாவின் தாத்தா திவ்யா-ஜீவா அபி-சிங்கம் ஆகிய இரு சோடிகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்கிறார். ஆனால், அதைத் தடுத்து நிறுத்த இராஜ் கபூரும், நாட்டாமையும் வருகின்றனர். அவர்களைச் சமாளித்து எவ்வாறு திருமணம் நடந்தது என்பதே மீதிக் கதையாகும். நடிகர், நடிகையர்
ஒலிப்பதிவுஇத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர்கள் பா. விஜய், சினேகன், பழநிபாரதி ஆகியோர் எழுதியிருந்தனர்.[3] வரவேற்புகதாபாத்திரங்கள் நீளமான வசனங்களைப் பேசியதாகவும், இசையும் இயக்கமும் பெரியதாக எடுபடவில்லை என்றும், முன்பாதி ஒரு மலையாளப் படம் போலவும், பின்பாதி ஒரு தெலுங்குப் படம் போலவும் இருப்பதாகவும் விமர்சனம் செய்யப்பட்டது.[2][4][5] மேற்கோள்கள்
வெளி-இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia