கேன் வில்லியம்சன்
கேன் ஸ்டுவார்ட் வில்லியம்சன் (Kane Stuart Williamson, பிறப்பு: ஆகத்து 8, 1990 நியூசிலாந்து துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் வலதுகை மட்டையாளர் மற்றும் அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளராக செயல்படுகிறார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணித் தலைவராக செயல்படுகிறார்.[1][2] இவர் நியூசிலாந்திலுள்ள வடக்கு மாவட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வரும் இவர் இங்கிலாந்திலுள்ள கிளவ்செஸ்டெர்ஷயர் மற்றும் யார்க்ஷயர் அணிகளுக்காக விளையாடி வருகிறார். டிசம்பர் 2007 ஆம் ஆண்டில் வில்லியம்சன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். .[3] 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான நியூசிலாந்து அணியின் தலைவரானார். இவர் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடினார். மேலும் 2012 ஐசிசி உலக இருபது20, 2014 ஐசிசி உலக இருபது20, 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் நியூசிலாந்து அணியில் இருந்தார்.இவர் இந்தியாவில் நடைபெற்ற 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் முழு நேர அணித் தலைவராக இருந்தார். இயான் சேப்பல் மற்றும் மார்ட்டின் குரோவ் ஆகியோர் ஜோரூட், விராட் கோலி, கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் சிமித் ஆகியோரை தேர்வுத் துடுப்பாட்டத்தின் சிறந்த நான்கு வீரர்கள் எனத் தெரிவித்தனர்.[4][5].[2][6][7] 2019 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார். மேலும் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் (578) எடுத்த அணித்தலைவர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு 2019 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது ஐசிசியால் வழங்கப்பட்டது. தற்போது தேர்வுப்போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ளார்(2020) முதல் இந்தியன் பிரீமியர் லீக்பெப்ரவரி 6, 2015 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இவரை 96,500 அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. 2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரை இந்த அணி வென்றது. 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இந்த அணி 460,500 அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை தக்கவைத்துக் கொண்டது. டேவிட் வார்னர் ,2018 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டுகாலம் சர்வதேச மற்றும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தடை விதித்தது.[8][9] இதனால் அணித்தலைவர் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.[10][11] 2020 தொடரில் வோர்ணர் மீண்டும் தலைவரானார் 2021 IPL தொடரில் அணியின் மோசமான பெறுபேறு காரணமான மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்று கொண்டார் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்ஆகஸ்டு 10, 2010 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இவர் சந்தித்த ஒன்பதாவது பந்தில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது போட்டியில் அஞ்செலோ மத்தியூஸ் பந்துவீச்சில் இவர் சந்தித்த இரண்டாவது பந்தில் ஓட்டங்கள் எதுவும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். அக்டோபர் 14, 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்கள் அடித்தார். அந்தத் தொடரில் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் வங்காளதேச அணியிடம் தோவியடைந்தது.[12] பின் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இடம்பெற்றார்.[13] சான்றுகள்
வெளியிணைப்புகள்கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: கேன் வில்லியம்சன் |
Portal di Ensiklopedia Dunia