ஸ்டீவன் பீட்டர் சிமித்: (Steven Peter "Steve" Smith, பிறப்பு: சூன் 21989) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் ஆவார்.[3][4]ஏப்ரல், 2018 அன்றைய நிலவரப்படி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசையில் இரண்டாம்lஇடத்தில் உள்ளார்[5][6]. டிசம்பர் 30, 2017 இல் தேர்வுத் துடுப்பாட்ட தரவரிசையில் 947 புள்ளிகள் பெற்றார். இது துடுப்பாட்ட வரலாற்றில் வீரர் ஒருவர் பெறும் இரண்டாவது அதிகபட்ச புள்ளியாகும்.டான் பிராட்மன் 961 புள்ளிகளோடு முதல் இடத்தில் நீடிக்கிறார்.[7] சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[8][9] உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகளில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.[10][11]
வலது கை சுழற்பந்துவீச்சாளராக முதலில் அணிக்குத் தேர்வானார்[12] தற்போது மட்டையாளராகவிளையாடி வருகிறார்.[13] 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சில தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். அதன் பின் 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைத்தது. 2015 ஆம் ஆண்டின் இறுதியில் மைக்கேல் கிளார்க்கிடம் இருந்த அணித்தலைவர் பொறுப்பு இவரிடம் வந்தது. அதன் பின்பு நான்காவது வீரராக விளையாடி வருகிறார்.[14]
மார்ச், 2018 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் பந்தை சேதப்படுத்தியதாக விமர்சனத்திற்கு உள்ளானார்.[21][22] பின் ஆத்திரேலியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விசாரணைக்குப் பின் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட இவருக்கு ஓராண்டு தடைவிதித்தது.[23]
ஆரம்பகாலவாழ்க்கை
ஸ்டீவ் சுமித் சூன் 21989 இல் சிட்னி, ஆத்திரேலியாவில் பிறந்தார். இவரின் தந்தை பீட்டர் ஆத்திரேலியாவைச் சார்ந்தவர், இவர் வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றவர் ஆவார்[24]. தாய் கிலியன்,[25]இலண்டன் நாட்டைச் சேர்ந்தவர். சுமித் மேனாய் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். 17 ஆவது வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு இங்கிலாந்தில் துடுப்பாட்டம் விளையாடச் சென்றார்.[26][27]
அடுத்த பருவத்தில் , கொச்சி டஸ்கர்ஸ் ஐ.பி.எல்லில் இருந்து நீக்கப்பட்டு, ஸ்மித் ஏலத்திற்கு வைக்கப்பட்டார். இவர் 2012 ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. ஆனால் பின்னர் மிட்செல் மார்ஷுக்கு மாற்றாக புனே வாரியர்ஸ் இந்தியா அவரை ஏலத்தில் எடுத்தது.[36] தனது புதிய அணிக்கான தனது முதல் போட்டியில், 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இந்தப் போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.[37]
சாதனைகள்
சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை விரைவாக எட்டிய ஆத்திரேலிய மட்டையாளர் மற்றும் உலகின் ஆறாவது விரைவான மட்டையாளர் எனும் சாதையினை படைத்தார்.[38][39] மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 7,000 ஓட்டங்களை விரைவாக எட்டிய மட்டையாளர் எனும் சாதனையினைப் படைத்தார் .[40][41] மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 6,000 ஓட்டங்களை விரைவாக எடுத்த இரண்டாவது இளம் ஆத்திரேலிய வீரர் எனும் சாதனை படைத்தார். முதல் இடத்தில் டான் பிரட்மன் உள்ளார்.[42][43][44] நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 1,000 ஓட்டங்களுக்கு மேல் அடித்த இரண்டாவது மட்டையாளர் ஆனார் .[45][46] தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் 947 புள்ளிகளைப் பெற்றார். இது டான் பிராட்மேனின் 961 க்குப் அடுத்ததாக இரண்டாவது மிக உயர்ந்த தரவரிசையாகக் கருதப்படுகிறது.[47] ஐசிசி சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர் விருதை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வென்ற ஒரே வீரர்.[48] ஐ.சி.சி தேர்வுத் துடுப்பாட்ட மட்டையாளர் தரவரிசையில் முதலிடம் பிடித்த இரண்டாவது இளைய மட்டையாளர் .[49]2015 துடுப்பாட்ட உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் ஐம்பது ஓட்டங்களுக்கு மேல் எடுத்தார்.[50]2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கான ஆத்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் குச்சக் காபாளராக இல்லாமல் ஐந்து கேட்சுகளை எடுத்தார். இதன்மூலம் உலக சாதனையை சமன் செய்தார், மேலும் இந்த சாதனையை நிகழ்த்திய 11 வது களத்தடுப்பாளர் ஆவார்.[51] சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபியை (ஐ.சி.சி ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட விருது) வென்ற இளம் வயது வீரர் ஆவார். ஆலன் பார்டர் பதக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வென்றுள்ள ஐந்தாவது வீரர்.[52] நான்கு முறை மெக்கில்வ்ரே பதக்கம் வென்ற முதல் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[53]