கே. டி. சந்தானம்
கே. டி. சந்தானம் (K. D. Santhanam) ஒரு இந்திய தமிழ் நாடக, திரைப்பட நடிகரும், கதை வசனகர்த்தாவும், பாடலாசிரியருமாவார்.[1][2] தொழில் வாழ்க்கைஇவர் மதுரையில் இயங்கி வந்த ஸ்ரீ மங்கள பால கான சபாவில் ஆசிரியராகப் பணியாற்றி இளம் பையன்களுக்கு நாடகத்துறைப் பயிற்சி அளித்து வந்தார். இவர் ஒரு கண்டிப்பான ஆசிரியர். தவறிழைக்கும் பையன்களை பிரம்பால் ஓட ஓட விரட்டி அடிப்பார். இவரால் பயிற்றுவிக்கப்பட்ட சிவாஜி கணேசன் பின்நாளில் உலகப் புகழ் நடிகரானார். தனது முன்னேற்றத்துக்கு சந்தானம் கொடுத்த பயிற்சியே காரணம் என சிவாஜி கணேசன் கூறியதாக ஆரூர்தாஸ் அவரது சுயசரித நூலில் எழுதியுள்ளார். நடிகராகஒரு குணச்சித்திர நடிகராக அவர் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பாசமலர் படத்தில் சிவாஜி கணேசனுக்கும் எம். என். ராஜத்துக்கும் திருமணம் ஏற்பாடு செய்யும் ஊர்ப் பெரியவர் இராஜரத்தினம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஆஹா என்ன பொருத்தம் என்ற ரகசிய போலீஸ் 115 என்ற திரைப்படப் பாடலில் இடையிடையே "அங்கே என்ன சத்தம்?" என்ற ஒரு அதிகாரக் குரல் கேட்கும். அது சந்தானத்தின் குரலே. இந்தப் படத்தில் அவர் நீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜெயலலிதாவின் தந்தை திரைப்படத் தயாரிப்பாளர் தனபால் முதலியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஆசை முகம் என்ற படத்தில் எம். ஜி. ஆரின் தந்தையாக நடித்தார். பாடலாசிரியராக1950 களில் தமிழ்த் திரையுலகில் பல துறைசார் நிபுணத்துவம் பெற்ற பாடலாசிரியர்கள் இருந்தார்கள். உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் இடதுசாரி மற்றும் திராவிட இயக்க தொடர்பான பாடல்களை எழுதினார்கள். அ. மருதகாசி விவசாயத்துடன் தொடர்புடைய பாடல்களை எழுதினார். கு. மா. பாலசுப்பிரமணியம் இனிமையான பாடல்களை இயற்றினார். கண்ணதாசன் வாழ்க்கை, தத்துவம் தொடர்பான பாடல்களை எழுதினார். தஞ்சை ராமையாதாஸ் சாதாரண மக்களுக்குப் பிடித்த ஜனரஞ்சகமான பாடல்களை எழுதினார். இந்நிலையில் சந்தானம் சந்தக்கவி எனச் சொல்லப்படும் தாளக்கட்டுடன் கூடிய பாடல்களை இயற்றி தன் முத்திரை பதித்தார். அவரது சந்தக் கவிகளில் குறிப்பிடத்தக்க ஒரு பாடல் 1957இல் வெளியான அம்பிகாபதி திரைப்படத்தில் இடம்பெற்ற தமிழ் மாலை தனைச் சூடுவாள் என்ற பாடலாகும். கதையின்படி அம்பிகாபதி 100 பாடல்கள் பாட வேண்டும். இந்தக் காட்சிக்காக சந்தானம் ஐந்து பாடல்கள் எழுதினார். இவற்றை வைத்து நூறு பாடல்களைப் பாடுவதாக காட்சி அமைப்பு செய்யப்பட்டது. இந்த முறையில் ஐந்தாவது பாடல் 99 ஆவது பாடலாக அமைந்தது. பாடும் புலவன் உணர்ச்சி வசப் படுகிறான். கடைசிப் பாடலின் இறுதி ஐந்து வரிகளை ஒரே மூச்சில் பாடுகிறான். இந்த ஐந்து வரிகளின் சொற்பிரவாகம் கேட்பவர்களை மெய்ம்மறக்கச் செய்தது. இந்தப் பாடல் சந்தானத்தின் முத்திரைப் பாடல் என்று சொல்லப்படுகிறது. மெல்லத் திறந்தது கதவு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற வா வெண்ணிலா என்ற தனது பாடலுக்கு சந்தானம் சண்டிராணி (1953) படத்திற்காக இயற்றிய வான் மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே... என்ற பாடல் தான் உத்வேகம் கொடுத்ததாக இசைஞானி இளையராஜா கூறியிருக்கிறார். 1950 ஆம் ஆண்டில் வெளியான விஜயகுமாரி என்ற திரைப்படத்தில் சந்தானம் எழுதிய லாலு லாலு என்ற நடனப் பாடலை வைஜயந்திமாலா பாடியிருக்கிறார். அக்காலத்தில் இப்பாடல் பிரபலமானது.[3] குறிப்பிடத்தக்க பல பாடல்களை சந்தானம் இயற்றியுள்ளார். திரைப்பங்களிப்புஇது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும். நடிகர், பாடலாசிரியர்
கதை வசனகர்த்தாமேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia