ஏழை பங்காளன்
ஏழை பங்காளன் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ராகினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] திரைக்கதைஒரு பணக்கார வாலிபன், 'அண்ணல் காந்தியடிகள் தனது பிரசங்கங்களிலும், கட்டுரைகளிலும் உலக மக்களுக்குப் போதித்த உண்மைகளை ஊருக்கு ஒருவராவது பின்பற்றி நடக்க ஆரம்பித்தால், இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி குறைந்து, நாளடைவில் வறுமை ஒழிந்து, வளமான வாழ்வை எல்லோரும் அடைய முடியும்' என நம்புகிறான். இதனால் தன்னிடமுள்ள செல்வத்தின் பெரும்பகுதியை ஏழைகளை முன்னேற்றப் பயன் படுத்துகிறான். இதனால் அவன் "ஏழை பங்காளன்" என ஊரார் புகழ்ந்துரைக்கிறார்கள். அந்தப் பணக்கார வாலிபன் என்னென்ன செய்தான் என்பதை விளக்குவதே படத்தின் கதை. நடிகர்கள்ஜெமினி கணேசன் தயாரிப்பு குழுதயாரிப்பு: வயலின் கே. வி. மகாதேவன் பாடல்கள்ஏழை பங்காளன் படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை யாத்தவர்கள்: கண்ணதாசன், வாலி, பஞ்சு அருணாசலம் ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆகியோர்.
மேற்கோள்கள்
உசாத்துணைஏழை பங்காளன் பாட்டுப் புத்தகம் வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia