படித்தால் மட்டும் போதுமா
படித்தால் மட்டும் போதுமா 1962 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சிவாஜி கணேசன், கே. பாலாஜி, சாவித்திரி, ராஜசுலோசனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். ஏ. பீம்சிங் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். கண்ணதாசன், மாயவநாதன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு விசுவநாதன் - இராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்தனர். இந்தத் திரைப்படம் சிவாஜி கணேசனுக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது. இத்திரைப்படம் வங்காள மொழித் திரைப்படமான "நா" வின் தழுவலாகும்.("நா" திரைப்படம் தராசங்கர் பாண்டியோபாத்யாய் எழுதிய "நா" என்ற நாவலின் தழுவல்). கதைபடத்தில் பாலாஜி, சிவாஜி கணேசன் ஆகியோர் அண்ணன் தம்பிகளாவர். தம்பி படிக்காதவன். அண்ணன் படித்தவன். இருவருக்கும் திருமணம் செய்யும் நோக்கத்துடன் தம்பிக்குப் பெண் பார்க்க அண்ணனும் அண்ணனுக்குப் பெண் பார்க்க தம்பியும் செல்வார்கள். பெண் பார்க்கப்போன இடத்தில் தம்பிக்காகப் பார்த்த பெண் அண்ணனின் மனதைக் கவர்ந்துவிடுகிறாள். அவளை அடைய திட்டம் போட்டு, ஒரு மொட்டைக் கடிதம் வழியே அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான். இருவருக்கம் திருமணம் நடந்துவிடுகிறது. ஆனால், இதன்பின்னர் தம்பியின் வாழ்க்கையில் புயல்வீசுகிறது. படிக்காதவனை அவனுடைய மனைவியே விரும்புவதில்லை. ஒரு கட்டத்தில் தம்பிக்கு அண்ணனின் சூழ்ச்சி தெரிந்துவிடுகிறது. சாவித்திரியும் ராஜ சுலோசனாவும் மனைவிகளாகவும் நடித்திருக்கின்றனர். அதன் பின்னர் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதை முடிவு. நடிகர்கள்
பாடல்கள்
உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia