ஆண்டவன் கட்டளை (1964 திரைப்படம்)
ஆண்டவன் கட்டளை (Aandavan Kattalai) என்பது 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். வீரப்பா தயாரித்த இப்படத்தை கே. சங்கர் இயக்கினார். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா ஆகியோர் முதன்மை வேடங்களிலும் நடித்தனர். ஜே. பி. சந்திரபாபு, கே. பாலாஜி, எஸ். ஏ. அசோகன், ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படம் 1964 சூன் 12 அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் 1930 ஆம் ஆண்டு வெளியான ஜெர்மன் திரைப்படமான தி புளூ ஏஞ்சலை அடிப்படையாகக் கொண்டது.[1] கதைபேராசிரியர் கிருஷ்ணன் ஒரு முன்மாதிரியான, நேர்மையான, கண்டிப்பான ஆசிரியர். அவர் சுவாமி விவேகானந்தரின் தீவிர பற்றாளர். எல்லாவற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கருதுபவர். வாழ்வில் திருமணம் ஒரு தடை என்று கருதுபவர். அவரது ஒரே நோக்கம் தன் தாயைக் கவனித்துக்கொள்வதும், தன் சகோதரி மகள் கோமதியை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைப்பதும் ஆகும். அவர் அனாதையான ராமுவை ஒரு சகோதரனின் இடத்தில் இருந்து அவர் கல்வி கற்க உதவுகிறார். கோமதியும் ராமுவும் காதலிக்கின்றனர். மாணவியான ராதா, கிருஷ்ணனை விரட்டி விரட்டி காதலிக்கிறாள். முதலில் அவளின் காதலை ஏற்காத கிருஷ்ணன் பிறகு அவள் காதலை ஏற்கிறார். ஒருமுறை கிருஷ்ணனும் ராதாவும் படகில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு ராதா தண்ணீரில் விழுந்து காணாமல் போகிறாள். அதற்கான பழி கிருஷ்ணன் மீது விழுந்து கைது செய்யப்படுகிறார். மகன் கைதான சேதியறிந்து அவரது தாயார் இறக்கிறார். மேலும் அவர் நீண்ட காலம் அவதூறும், விசாரணையையும் சந்திக்கிறார். ராதாவின் உடல் கண்டுபிடிக்கப்படாததால் கிருஷ்ணன் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படுகிறார். ஆனால் அவரை முன்பு மதித்த சமூகம் இப்போது ஒதுக்கி வைக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் தற்கொலைக்கு முயல்கிறார், ஆனால் அவரால் ஒரு முறை காப்பாற்றப்பட்ட ஒரு நாய் அவரின் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றுகிறது. இதை அவர் ஒரு சமிக்ஞையாக எடுத்துக் கொண்டு, நாய் கொடுத்த தனது புதிய வாழ்க்கையில், மூர்த்தி என்ற பெயரில் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடிவெடுத்து ஒரு சரங்கத்தில் வேலைபார்த்து வருகிறார். இதற்கிடையில், பழைய நினைவுகளை இழந்த ராதாவை கிருஷ்ணன் சந்திக்கிறார். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே கதையாகும். நடிகர்கள்
பாடல்கள்விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[2][3] "ஆறுமனமே ஆறு" பாடல் சிந்து பைரவி ராகத்திலும்,[4][5] "அமைதியான நதியினிலே" அரிக்காம்போதியிலும் அமைக்கப்பட்டது.[6][7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia