கோம்பை

கோம்பை (Kombai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் கோம்பை நாய் வகைக்குப் பெயர்பெற்றதாகும். கோம்பை, தேனியிலிருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கோம்பை பேரூராட்சி 15,960 மக்கள்தொகையும், 19.02 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 7 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

பெயர்க் காரணம்

கோம்பை என்பதற்கு முடக்கு, மலையடிவாரம், தென்னை என்று பல பொருள் குறிக்கும் சொல் என்றாலும், இங்கு பன்றிமலை, மேற்குமலை, கழுகுமலை என்னும் மூன்று மலைகளிடையே முன்பு முடங்கிக் கிடந்ததால் முடங்கில் இருந்ததால் இப்பெயர் பெற்றது

வரலாறு

நாயக்கர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் கோம்பை ஒன்று.[2]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9°50′N 77°19′E / 9.83°N 77.32°E / 9.83; 77.32 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 399 மீட்டர் (1309 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது மேற்கே மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான ஏலமலைகளையும் கிழக்கே சாலைமலைக்குன்றையும் கொண்டு இடையே அமைந்துள்ளது. உத்தமபாளையம் போடிநாயக்கனூர் சாலை வழித்தடத்தில் உத்தமபாளையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

சமூகம்

பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். கிறித்தவர்களும் இசுலாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். மேற்குமலை அடிவாரத்தில் 400 ஆண்டுப் பழைமையான திருமலைராயப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் தேர், வைணவக் கோவில் தேர்களுள் இரண்டாவது பெரியதாகும். 150 ஆண்டுப் பழைமையான சிறீ கன்னிகா பரமேசுவரி பள்ளிகள் ஊருக்குத் தெற்கே உள்ளன.

பொருளாதாரம்

முதன்மைத்தொழிலாக வேளாண்மை விளங்குகிறது. தென்னை, காய்கறிகள், நிலக்கடலை, சோளம், கம்பு ஆகியன பொதுவாகப் பயிரிடப்படுகின்றன. வெள்ளிதோறும் ஊருக்குக் கிழக்கே வாரச்சந்தை கூடுகிறது. இது இன்றளவும் உயிர்ப்புடன் உள்ள சிற்றூர்ச்சந்தைகளுள் ஒன்றாகும். சுற்றுவட்டாரங்களில் மஞ்சள்காமாலை நாட்டு மருத்துவத்துக்குப் பெயர்பெற்றது.

மேற்கோள்கள்

  1. கோம்பை பேரூராட்சியின் இணையதளம்
  2. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml
  3. "Kombai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya