மார்க்கையன்கோட்டை

மார்க்கையன்கோட்டை (ஆங்கிலம்:Markayankottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது தேனி - கம்பம் செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,024 மக்கள்தொகையும், 5.8 ச.கி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 48 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

பொருளாதாரம்

மாா்க்கையன்கோட்டை பேரூராட்சி முல்லைப் பொியாற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி பசுமையாக இருப்பதால், இங்கு விளைவிக்கப்படும் நெல், தென்னை மற்றும் வாழை போன்றவைகள் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது.

வரலாற்று சிறப்பு

இங்குள்ள தொட்டிய நாயக்கர்கள் இறந்த பிறகு நடும் நடுக்கல்லின் மூலம் பலநூறு ஆண்டு காலம் முந்தைய வரலாறுகளை ஆராய ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. மார்க்கையன்கோட்டை பேரூராட்சியின் இணையதளம்
  2. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya