கோயம்பேடு மெற்றோ நிலையம்
கட்டுமான வரலாறுஇந்த நிலையத்தை ஒருங்கிணைந்த கட்டமைக்கப்பட்ட கூட்டமைப்பு (சி.சி.சி.எல்) கட்டியது. இந்த நிலைய பணிகள் டிசம்பர் 2012இல் கட்டமைப்பு நிறைவடைந்தது. அரும்பாக்கம், புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா பிஎம்பிடி மெற்றோ நிலையம், வடபழனி மற்றும் அசோக் நகர் ஆகிய மெற்றோ நிலையங்களுடன் சேர்ந்து ரூபாய் ₹ 1,395.4 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.[1] நிலையம்இது கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அருகிலுள்ள ஒரு உயரமான நிலையம் ஆகும். இந்த நிலையம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 23,000 பயணிகளைக் கையாளும் திறனுடையது. தளங்களின் உயரம் தரை மட்டத்திலிருந்து சுமார் 15 மீட்டர் உயரமும் நீளம் 140 மீட்டர் ஆகும்.[2] தளவமைப்பு
வசதிகள்கோயம்பேடு மெற்றோ நிலையத்தில் உள்ள ஏடிஎம்களின் பட்டியல் ஆதரவு உள்கட்டமைப்புசென்னை மத்திய மெற்றோ நிலையம் மற்றும் ஆலந்தூர் நிலையங்களுடன், இந்த நிலையத்தில் மாநிலத்தின் மின்சார கட்டத்திலிருந்து மின்சாரம் வழங்குவதற்காக 230-கே.வி பெறும் துணை மின்நிலையம் நிறுவப்பட்டது.[3] இந்த துணை மின்நிலையம் இரயில்களுக்கு 25-கே.வி மின்சாரத்தையும், நிலையங்களுக்கு 33-கே.வி. மின்சாரத்தினையும் வழங்குகிறது.[4] அசோக் நகர் மற்றும் வடபழனி மெற்றோ நிலையங்களுடன், கோயம்பேடு மெற்றோ நிலையம் கடைகள் அல்லது அலுவலக இடங்கள் இடத்தைக் குத்தகைக்கு விடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. தீ பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நிலையத்தில் 50,000 முதல் 100,000 லிட்டர் திறன் கொண்ட நிலத்தடி நீர்த் தொட்டிகள் அமைக்கப்படுள்ளன.[5] கோயம்பேடு சந்திப்பிலிருந்து இந்த நிலையம் 1 கி.மீ. க்குள் உள்ளது. ஜவஹர்லால் நேரு சாலை- காளியம்மன் கோயில் தெரு சந்திப்பு வழியாக 1 கி.மீ. நீளத்திற்கு மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. பூந்தமல்லி உயர் சாலையின் குறுக்கே நிலையத்திற்கு அருகில் ஒரு உயர்மட்ட நடைபாதை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.[2] இந்த நடைபாதை உரோகிணி திரையரங்கினை கோயம்பேடு மெற்றோ நிலையத்துடன் இணைக்கிறது.[6] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia