கோரக்கி
கோரக்கி (Ghorahi) (நேபாள மொழி|நேபாளி]]: घोराही उपमहानगरपालिका), நேபாளத்தின் ஏழாவது பெரிய நகரமும், துணைநிலை மாநகராட்சியும், தாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். அமைவிடம்மத்தியமேற்கு நேபாளத்தின், மாநில எண் 5ல் உள்ள தாங் மாவட்டத்தில், உள்தராய் சமவெளியில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் பழைய பெயர் திருபுவன்நகர் ஆகும். புவியியல்கோரக்கி நகரம், காத்மாண்டிற்கு தென்கிழக்கே 413 கி.மீ. தொலவிலும்; ராப்தி மண்டலத்தின் பெரிய நகரமான கோரக்கியின் தெற்கில், சிவாலிக் மலைத்தொடரும்; வடக்கில் மகாபாரத மலைத்தொடரும் உள்ளது. இந்நகரத்தின் கிழக்கில் பபாய் ஆறு பாய்கிறது. மகாபாரத மலையடிவாரத்தில் அமைந்த கோரக்கி நகரம், கடல் மட்டத்திலிருது 2300 அடி (701 மீ) உயரத்தில் உள்ளது. போக்குவரத்துதரிகோன் எனுமிடத்தில் அமைந்த தாங் வானூர்தி நிலையம், தாங் நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலவில் உள்ளது. காட்மாண்டு நகரத்திற்கு அடிக்கடி வானூர்தி சேவைகள் உள்ளது. இந்நகரத்திலிருது 152 கி.மீ. தொலைவில் நேபாள்கஞ்ச் பன்னாடு வானூர்தி நிலையம் உள்ளது. மக்கள்தொகைகோரக்கி மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் மொத்த மக்கள்தொகை 156,164 ஆகும்.[1] வேறு மாவட்டத்தவர்கள் மற்றும் மாநிலத்தவர்கள், வேலைவாய்ப்பிற்காக, இந்நகரில் அதிகமாக குடியேறுகின்றனர்.[2] கல்விகோரக்கி நகரத்தின் சராசரி எழுத்தறிவு 73% ஆகும். நேபாள சமசுகிருத கல்லூரி, மகேந்திர பல்நோக்கி கல்லூரி, ஆயுர்வேதக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் இதனருகே உள்ளது. மத்திய மேற்கு நேபாளத்தில், கோராக்கி நகரம் கல்வி மையமாக விளங்குகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia