கோ. நம்மாழ்வார்
கோ. நம்மாழ்வார் (G. Nammalvar, 6 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார்.[1] இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார். வரலாறுநம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ச. கோவிந்தசாமி பார்புரட்டியார் மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர் ஆவார்.(சான்று த.ரெ.தமிழ்மணியின் நம்மாழ்வார் வாழ்க்கைக் குறிப்பு நூல்) இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007 ஆம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை இவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார். எதிர்த்துப் போராடியவை
களப்பணிகள்
நடைப் பயணங்கள்
உருவாக்கிய அமைப்புகள்
படைப்புகள்
விருதுகள்தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.[5] இறப்புஇவர் 2013 திசம்பர் 30 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.[6][7][8] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia