வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
வெங்கி ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Sir Venkatraman Ramakrishnan, பிறப்பு: 1952)[1], தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும்[2] இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளரும் ஆவார்[3]. அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம் (ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக" வெங்கட்ராமனுக்கும் தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருக்கும் 2009 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உயிர்களின் மூலச்செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன் என்பது பற்றிய தெளிவு ஏற்படுவதற்கும் அதன் மூலம் உயிர்களைக் காப்பதற்கும் இம்மூவரின் கண்டுபிடிப்புகள் பெரிதும் பயன்படும்.[4] நோபல் பரிசைப் பெற்ற மூன்றாவது தமிழர் ராமகிருஷ்ணன்[5]. இவருக்கு முன்னர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983) ஆகியோர் நோபல் பரிசைப் பெற்றிருந்தனர். இவருக்கு 2011 திசம்பர் 31 இல் பிரித்தானிய அரசு சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது[6]. வாழ்க்கைக் குறிப்புவெங்கட்ராமன் 1952 இல் சிதம்பரத்தில் சி. வி. ராமகிருஷ்ணன், ராஜலட்சுமி தம்பதிகளுக்குப் பிறந்தார்,[1]. அவரது தந்தையின் பணி காரணமாக குஜராத்திற்கு இடம் பெயர்ந்த வெங்கட்ராமன் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை அங்குள்ள வடோதரா நகரில் கிருத்தவப் பள்ளி ஒன்றில் பயின்றார்[7]. இயற்பியலில் பட்டப்படிப்பை பரோடா, மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் 1971 ஆம் ஆண்டில் முடித்து, பின்னர் 1976 இல் ஐக்கிய அமெரிக்காவில் ஒகையோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்[8][9]. அதன் பின்னர் சான் டியேகோ, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓராண்டு காலம் உயிரியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது அவர் தனது துறையை உயிரியலுக்கு மாற்றி அங்கு பட்டப்பின் படிப்பைத் தொடங்கி 1978 இல் முடித்தார்[10]. கல்விக்குடும்பம்வெங்கட்ராமனின் பெற்றோர் (சி.வி.இராமகிருஷ்ணன், இராஜலஷ்மி) மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது (1955) உயிர்-வேதியியல் பிரிவு தொடங்கக் காரணமாக இருந்தனர். அக்காலத்தில் வெங்கியின் வீடே ஒரு உயிர்-வேதியியல் ஆய்வகம் போல் இருந்ததாம். இது வெங்கியின் அறிவியல் நோக்கு வளர்ந்திட உதவியுள்ளது என்று அவருடன் பல்கலையில் பயின்ற Dr. பானோட் கூறியுள்ளார் [11]. இவரது தமைக்கையார் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார். நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகை (NSTC)தன் பள்ளிப்பருவத்தில் தேறிய நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகைத் தேர்வு ராமகிருஷ்ணனை அறிவியல் நோக்கி ஈடுபாடுகொள்ளத் தூண்டியது.[12] துறை-சார் அனுபவங்கள்
ஆய்வியல் விருப்பங்கள்தற்போது
முன்பு
நோபல் பரிசு2009-ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசுத்தொகை 10 மில்லியன் க்ரோனர் (14 இலட்சம் அமெரிக்க டாலர்) பரிசை வென்ற மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ’’அவர்கள் உருவாக்கிய முப்பரிமாண மாதிரிகள் வெவ்வேறு நுண்ணுயிர்-எதிரிகள் [16] எவ்வாறு ரைபோசோம்களுடன் பிணைப்பை ஏற்படுத்துகின்றன என்பதை விளக்குகின்றன; இக்கண்டுபிடிப்புகள் புதிய நுண்ணுயிர்-எதிரிகளை உருவாக்குவதற்கு உதவுகின்றன’’ என்று நோபல் பரிசுகளை அளிக்கும் ராயல் சுவீடிஷ் அகாதெமி ஆவ் சயன்சசு தெரிவித்துள்ளது. நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனின் ஆய்வுராமகிருஷ்ணன் ரைபோசோம்களின் 3-ஆங்க்சுடிராம் அளவுடைய[13], 30S என்றழைக்கப்படும் சிறிய, துணை அலகுகளின் படிகக் கட்டமைப்புகளைத் தெளிவு படுத்தினார். இதனால் ரைபோசோம்களின் (அறிவியலாளர்களை வியக்க வைத்த) ஒரு பண்பைப் பற்றிய புரிதல் ஏற்பட்டது[17]. ஆய்வின் முக்கியத்துவம்ரைபோசோம்களின் அமைப்பினடிப்படையில் புதிய நுண்ணுயிர் எதிரிகள் உருவாக்குதலில் இவரது ஆய்வு பயன்படுகிறது.[18] பிற விருதுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia