மூவேந்தர் அல்லாத சங்க கால அரசர்களை இங்கு மன்னர்கள் என்று குறிப்பிடுகிறோம். இவர்களைச் சிற்றரசர்கள் என்றும், குறுநில மன்னர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். இளவரசர்கள், அரசியர், கிழான் போன்ற ஊர்ப் பெருந்தனக்காரன், படைவீரர்கள், வள்ளல்கள், சிறப்புக்குரியோர், இராமன், சீதை, வீமன், அருச்சுணன் போன்ற புராணப் பெருமக்கள் முதலானோர் பெயர்களும் இவற்றோடு கலந்துள்ளன.
இவை சேர சோழ பாண்டியர் அல்லாத சங்ககாலத் தனிமனிதனைக் குறிக்கும் பெயர்கள்.
சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை தொகுப்புப் பதிப்பு, அறிஞர் கழக ஆய்வு, பாரிநிலையம் வெளியீடு, (1940) இரண்டாம் பதிப்பு 1967, சிறப்புப்பெயர் அகராதி என்னும் தொகுப்பிலிருந்து பிரித்துத் தொகுக்கப்பட்டது.