சபர்மதி விரைவு வண்டி
19167 / 19168 அகமதாபாத்-வாரணாசி எக்ஸ்பிரஸ் (Ahmedabad-Varanasi Sabarmati Express), மேற்கு இந்தியாவின் அகமதாபாத் நகரத்தையும், வட இந்தியாவின் வாரணாசி நகரத்தையும், ஜான்சி வழியாக இணைக்கும் விரைவுத் தொடர் வண்டி ஆகும். இது 1592 கிலோ மீட்டர் பயணத் தொலைவை, சராசரியாக 44 கிலோ மீட்டர் வேகத்தில், 34 மணி 35 நிமிட நேரத்தில் கடக்கிறது. இது அகலப் பாதையில், மின்சாரத்தில் ஓடும் தொடர் வண்டியாகும்.இவ்வண்டி வாரத்தின் நான்கு நாட்களான திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் அகமதாபாத்திலிருந்து புறப்படுகிறது. இது 50 நிறுத்தங்களில் நின்று செல்கிறது. பயண அட்டவணைவண்டி எண் 19167 அகமதாபாத் தொடருந்து நிலையத்திலிருந்து (ADI) திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் இரவு 11.10 மணி அளவில் புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் வண்டி எண் 19168 வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து (BCY)செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.15 மணி அளவில் புறப்படுகிறது. வழித்தடங்கள் மற்றும் நிறுத்தங்கள்
பெட்டிகள் விவரம்சபர்மதி எக்ஸ்பிரஸ் 21 பெட்டிகள் கொண்டது.[1]
வரலாறு27 பிப்ரவரி 2002 அன்று காலையில் வாரணாசியிலிருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் தொடருந்து கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நின்றிருந்த போது, சமூக விரோதிகள் ஒரு பெட்டியில் நெருப்பு வைத்த காரணத்தால், பயணிகளில் 55 பேர் தீக்காயத்தால் கொல்லப்பட்டனர். [2][3]இதனால் குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia