அக்பர்பூர், அம்பேத்கர் மாவட்டம்
அக்பர்பூர் (Akbarpur), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது தமசா ஆற்றின் கரையில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கே 187 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது அயோத்திக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 61 வார்டுகளும், 17,720 வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 1,11,447 ஆகும். அதில் ஆண்கள் 57,330 மற்றும் பெண்கள் 54,117 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 944 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 74.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 15,310 மற்றும் 50 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 75.29%, இசுலாமியர் 23.99%, கிறித்தவர்கள் 0.21% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[2] பொருளாதாரம்அரிசி ஆலைகள், கைலிகள் தயாரிக்கும் விசைத்தறி கூடங்கள் இந்நகரத்தில் அதிகம் உள்ளது. போக்குவரத்துசாலைகள்சாலைகள் மூலம் அக்பர்பூர் பைசாபாத், அயோத்தி, லக்னோ, சுல்தான்பூர், ரேபரேலி, அமேதி, ஆசம்கர், ஜவுன்பூர், வாரணாசி, அலகாபாத் போன்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக செல்லும் பூர்வாஞ்சல் விரைவுச் சாலை அக்பர்பூர் வழியாகச் செல்கிறது.[3] இரயில் நிலையம்அக்பர்பூர் இரயில் நிலையம் அருகே[4]பைசாபாத், அயோத்தி இரயில் நிலையங்கள் உள்ளது. வானூர்தி நிலையம்இதனருகே அமைந்த அயோத்தி வானூர்தி நிலையம் உள்ளது.[5] கல்வி
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia