நாடியாத்
நாடியாத் (Nadiad), இந்தியா, குஜராத் மாநிலத்தின் கேதா மாவட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றமும் ஆகும். வரலாறுகழைக்கூத்தாடிகள் தங்கியிருந்த காரணத்தினால், இந்நகருக்கு நாடியாத் என்று வழங்கலாயிற்று. நாடியாத் நகரம் ஒன்பதாம் எண்னுக்கு பெயர் பெற்றது. நாடியத் நகரத்தின் ஒன்பது சாலைகள், 9 கிராமங்கள் அல்லது நகரங்களைக் நோக்கிச் செல்கிறது. 9 ஏரிகள் நகரத்தைச் சுற்றி அமைந்துள்ளன. படித்தவர்களின் நகரம் என்ற பெருமை பெற்றது. இந்நகரத்தை துவக்கத்தில் இசுலாமியர்களும், பின்னர் பரோடாவின் கெய்க்வாட் இந்து மன்னர்களும் ஆண்டனர்.
மக்கள் வகைப்பாடு2011ஆம் ஆண்டு தற்காலிக கணக்கெடுப்பின்படி இந்நகர மக்கட்தொகை 192,799ஆக உள்ளது.[1]. எழுத்தறிவு 95 விழுக்காடாக உள்ளது. பார்க்க வேண்டிய இடங்கள்
தொழில்கள்நாடியாத் நகரம் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், துணி ஆலைகள், மர வனிகம் ஆகியவற்றிக்குப் பெயர் பெற்றது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia