சப்தகிரி (இதழ்)
சப்தகிரி (Sapthagiri) என்பது திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்படும் பக்தி இதழ் ஆகும். இது 1949இல் செய்திக் குறிப்பாகத் தொடங்கப்பட்டது. தற்பொழுது சப்தகிரி இதழானது சமசுகிருதம், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் மாதந்தோறும் வெளியிடப்படுகிறது.[3] மத சிந்தனைகளைப் பரப்புவது, ஆன்மீக கொள்கைகளை வளர்ப்பது மற்றும் மக்களிடையே பக்தி மற்றும் நேர்மறையான சிந்தனையை வளர்ப்பது இந்த இதழின் நோக்கம். சப்தகிரி இந்து தத்துவம் மற்றும் கலாச்சாரம் குறித்த கட்டுரைகளை வெளியிடுகிறது. இதில் கேள்வி மற்றும் பதில் பகுதியினையும் கொண்டுள்ளது. இந்த இதழிற்கு இணையவழி சந்தா செலுத்தும் வசதியும் உள்ளது.[4] இந்த இதழின் பழைய பிரதிகளை இணையத்தில் படிக்கலாம்.[5] பொருளடக்கம்இந்த இதழ் மகாபாரதம் மற்றும் திருமலை கோயில் வரலாறு குறித்த தொடர்களை வெளியிடுகிறது. பக்தர்களின் சில தனிப்பட்ட அனுபவங்களும், புராணங்களிலிருந்து குழந்தைகள் வரையிலான நன்னெறிக் கதைகளையும் கொண்டுள்ளது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான திட்டங்கள் பற்றிய விவரங்களையும் கொண்டுள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia