ஸ்ரீ வெங்கடேசுவர பக்தி அலைவரிசை
ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி அலைவரிசை (எஸ்.வி.பி.சி டிவி )(Sri Venkateswara Bhakthi Channel (SVBC TV) ( தெலுங்கு: శ్రీ వేంకటేశ్వర భక్తి ఛానల్ ) என்பது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னோடி பக்தி சேனலாகும். இந்தியாவின் ஆந்திராவின் திருப்பதியிலிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானங்களில் நிகழ்த்தப்படும் இந்து பக்தி நிகழ்ச்சிகள் மற்றும் பூஜைகளின் நேரடி ஒளிபரப்புகளை ஒளிபரப்ப அர்ப்பணிக்கப்பட்ட முதல் 24 மணி நேரச் செயற்கைக்கோள் தெலுங்கு பக்தி அலைவரிசை இதுவாகும்.[2] இந்த தொலைக்காட்சி அலைவரிசையானது இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அவர்களால் 2008ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் நாளன்று தொடங்கப்பட்டது. இதன் முக்கிய உள்ளடக்கமாக இந்து பக்தி ஒளிபரப்பாகும். இது திருமலை திருப்பதியில் நடைபெறும் தினசரி சடங்குகளை ஒளிபரப்புகிறது. இது ஸ்ரீ வெங்கடேஸ்வர பிரம்மோத்ஸவம் என்று அழைக்கப்படும் ஆண்டு விழாவையும் ஒளிபரப்புகிறது. இந்த அலைவரிசையினை மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் விரிவுபடுத்த டி.டி.டி முடிவு செய்து, தற்பொழுது கன்னடம், தமிழ் மொழிகளிலும் ஒளிபரப்பிவருகிறது. [3] இந்த அலைவரிசை, இதன் பக்தி தொலைக்காட்சி ஒளிபரப்பிற்காக 2009ல் 11 நந்தி தொலைக்காட்சி விருதுகளை வென்றது. இது இந்தியாவில் உள்ள அனைத்து கேபிள், டிஷ் மற்றும் ஐபிடிவி இயங்குதளங்களில் இலவசமாக ஒளிபரப்பக்கூடிய அலைவரிசையாக உள்ளது. இது அலைவரிசை இணையத்தில் நேரடியாகவும் ஒளிபரப்பப்படுகிறது.[4] எஸ்.வி.பி.சி 2 எனும் இதன் அலைவரிசை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia