சரக்கு சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரகம்
இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் இயங்கும் ஒரு பிரிவாக செயல்படும் சரக்கு சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குநரகம் ( Directorate General of GST Intelligence)[2] சட்ட அமலாக்கப் பணிகளில் ஈடுபடுகிறது. இந்த புலனாய்வு அமைப்பு, சரக்கு மற்றும் சேவை வரிகளை கட்டாமல் வணிகம் செய்பவர்களை விசாரணைகள் மற்றும் புலனாய்வுகள் மூலம் கண்டுபிடித்து தண்டனை விதிக்க வகை செய்கிறது.[3] 1979-இல் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் பெயரை, 2017-இல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தியதை அடுத்து இதன் பெயரை சரக்கு சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குநரகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்திய தேசிய புலனாய்வு கூட்டமைப்பில்[4]சரக்கு சேவை வரி புலனாய்வு அமைப்பும் ஒரு பிரிவாக செயல்படுகிறது. மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் அதிகாரிகளிலிருந்து இப்புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் வரிகளை செலுத்தத் தவறியவர்களை விசாரணை செய்யும் உச்ச புலனாய்வு நிறுவனமாகும். மறைமுக வரிச் சட்டங்களை நிர்வகிப்பதை மேம்படுத்தும் பணியை சரக்கு சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரிகள் அரசாங்க நிதியின் முக்கிய ஆதாரமாக இருப்பதால், வரி ஏய்ப்பு அனைவரையும் பாதிக்கிறது மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பெரிய பணியைத் தடுக்கிறது. மத்திய கலால் வரி, சேவை வரி மற்றும் சரக்கு வரி போன்ற மறைமுக வரிகளை ஏய்ப்பவர்களின் கணக்குகளை விசாரணை செய்வதும், புலனாய்வு செய்வதும் இதன் முக்கியப் பணியாகும். இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia