தேசிய பாதுகாப்பு மன்றம் (இந்தியா)
தேசியப் பாதுகாப்பு மன்றம் (National Security Council) இந்திய நாட்டின் அரசியல், பொருளாதாரம், எரிசக்தி மற்றும் உத்திப்பூர்வமான பாதுகாப்பு குறித்த விடயங்களை நிர்வகிக்கும் உச்ச நிறுவனம் ஆகும். முதன் முதலில் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் 19 நவம்பர் 1998 அன்று நிறுவப்பட்டது. இது இந்தியப் பிரதமரின் அலுவலகத்தின்கீழ் செயல்படுகிறது. இது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் செயல்படுகிறது. இதன் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பிரிஜேஷ் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். இதன் தற்போதைய தலைவர் அஜித் தோவல் ஆவார். கட்டமைப்புதேசியப் பாதுகாப்பு மன்றம் மூன்று அடுக்குகள் கொண்டது. அவைகள் மூலோபாயக் கொள்கை வகுக்கும் வகுக்கும் குழு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குழு மற்றும் செயலகம் ஆகும்.[4][5] மூலோபாயக் கொள்கைக் குழுதேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் தலைமையில் இக்குழுவில் கீழ்கண்டவர்கள் அங்கம் வகிப்பர்:
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் குழு2025 பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு 1 மே 2025 நடைபெற்ற அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையின்படி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் குழு திருத்தி அமைக்கப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.[6][7] [8][9] இராணுவ அதிகாரிகள்
காவல்துறை அதிகாரிகள்வெளிநாட்டு தூதுவர்கள்
கூட்டுப் புலனாய்வுக் குழுஇந்திய அரசின் கூட்டுப் புலனாய்வுக் குழுவானது இந்திய உளவுத்துறை, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு, இராணுவப் புலனாய்வு இயக்குநரகம், இந்தியக் கடற்படை புலனாய்வு இயக்குநரகம் மற்றும் இந்திய வான்படை புலனாய்வு இயக்குநரகம் ஆகியவைகளிடமிருந்து வரும் முக்கியமான உளவு மற்றும் புலனாய்வுத் தரவுகளை பரிசீலித்து தேசியப் பாதுகாப்பு மன்றத்தில் சேர்க்கிறது. கூட்டுப் புலனாய்வுக் குழுவின் செயலகம் நடுவண் தலைமைச் செயலகத்தில் செயல்படுகிறது. உசாத்துனைகள்
|
Portal di Ensiklopedia Dunia