இராணுவப் புலனாய்வு இயக்குநரகம்
இராணுவப் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Military Intelligence (M.I.) இந்தியத் தரைப்படையின் கீழ் செயல் படும் புலனாய்வு அமைப்பாகும்.[2] இராணுவ உளவுத்துறையின் முதன்மை நோக்கம், இராணுவத்தின் தந்திரோபாய, செயல்பாட்டு மற்றும் மூலோபாய அளவிலான தேவைகளுக்கு சரியான நேரத்தில், பொருத்தமான, துல்லியமான மற்றும் ஒத்திசைக்கப்பட்ட உளவுத் தகவல்களை இந்தியத் தரைப்படைக்கு வழங்குவதாகும். மேலும் இந்திய ராணுவத்திற்குள் இருக்கும் எதிரிகளின் உளவுத்துறை அச்சுறுத்தல்களைக் கண்டறிதல் மற்றும் எதிர்-உளவுத்துறை நடவடிக்கைகளையும் இது நடத்துகிறது.[3] இந்த அமைப்பு 1941ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது இரண்டாம் உலகப் போர், இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948, இந்தியா-பாகிஸ்தான் போர், 1965, இந்திய சீனப் போர், 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் மற்றும் கார்கில் போர்களில் பணியாற்றியுள்ளது. அமைப்புஇராணுவப் புலனாய்வு இயக்குநரகத்தில் சுமார் 3,700 பேர் உள்ளனர். அவர்களுக்கு புனே நகரத்தில் உள்ள இராணுவ புலனாய்வு பயிற்சிப் பள்ளி மூலம் உளவுப் பயிற்சி தரப்படுகிறது.[4] இதன் புலனாய்வு அமைப்பின் புவியியல் செயல் பரப்பு, நாட்டின் எல்லைகளிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவாகும்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia