சாத்தாவாரியினம்
அசுபாரகசு அஃபிசினாலிசு (wild asparagus, தாவர வகைப்பாட்டியல்: Asparagus officinalis [1]) என்பது அசுபாரகசு பேரினத்தில் உள்ள ஒரு பூக்குந்தாவர இனமாகும். இதிலிருந்து அசுபாரகசு என்று அழைக்கப்படும் காய்கறி கிடைக்கிறது. இந்த தாவரம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா, மேற்கத்திய ஆசியா போன்ற நாடுகளை இருப்பிடமாகக் கொண்டதாகும்.[2][3][4] இது காய்கறி பயிராகவும் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது.[5] சொற்பிறப்பியல்
வளரியல்புஅசுபாரகசு என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும். இது நீண்டகாலம் வாழும் தன்மையுடைய தாவரமாகும். இந்த தாவரம், 100–150 சென்டிமீட்டர்கள் (39–59 அங்) உயரமாகவும், தடித்த லாரிஸா தண்டுகள் கொண்டு, அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக்கொத்துகளை உடையதாகவும் உள்ளது. செதிள் இலைகளின் இலைக்கக்கத்தில் கள்ளியின் (உருமாறிய தண்டுகள்) முட்களைப் போன்று அதனுடைய "இலைகள்" அமைந்திருக்கும்; அந்த இலைகள் மிகவும் 6–32 மில்லிமீட்டர்கள் (0.24–1.26 அங்) நீளமாகவும் 1 மில்லிமீட்டர் (0.039 அங்) அகலமாகவும் 4 முதல் 15 இலைகள் வரை கொத்து கொத்தாக இருக்கும்.இதனுடைய வேர்கள் தண்டங்கிழங்கு போன்றவை.இதனுடைய பூக்கள் மணியின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது பச்சை கலந்த வெள்ளை, மஞ்சள் நிறமுடையதாக இருக்கும்.4.5–6.5 மில்லிமீட்டர்கள் (0.18–0.26 அங்) இவை நீண்டு, 6 பூவுறையிதழ்களுடன் அடியில் சிறிதளவு இணைக்கப்பட்டிருக்கிறது; இந்த பூக்கள் தனியாகவோ, கொத்தாக இரண்டிலிருந்து மூன்றாகவோ, கிளைகள் சேரும் இடங்களில் பூக்கும். இது ஒரு இருபால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியான தாவரங்களில் பூக்கும். ஆனால், சில நேரங்களில் இருபாலினத்து உறுப்புக்களும், ஒரே பூவில் காணப்படும். இதில் காய்க்கும் பழம், மிகவும் சிறிய சிகப்பு பெர்ரியை போன்று, 6 முதல் 10மிமி விட்டமுடையதாக இருக்கும். வாழிடம்இந்த தாவரம், ஐரோப்பாவின் மேற்கத்திய கடற்கரைகளில் (வடக்கு ஸ்பெயின் வடக்கிலிருந்து அயர்லாந்து, பிரிட்டன், வடமேற்கு ஜெர்மனி) வரை வளர்கிறது. இது அஸ்பாரகஸ் அஃபிஸினாலிஸாகவும் , நிலத்துக்கடியில் வளரும் (ப்ரொஸ்ட்ராட்டஸ்) தாவரத்தின் துணைவகையாகவும் (டுமார்ட்) கருதப்படுகிறது. இந்த தாவரம், அதனுடைய தாழ்-வளர்ச்சி மூலமாக வேறுபடுத்தப்படுகிறது. நிலத்துக்கு அடியில் உள்ள தண்டு 30–70 சென்டிமீட்டர்கள் (12–28 அங்) உயரம் வரை மட்டுமே வளரும். குட்டையான கள்ளிகள் 2–18 மில்லிமீட்டர்கள் (0.079–0.709 அங்) நீளம் வரை வளரும்.[2][6] இது ஒரு வேறுபட்ட அசுபாரகசு நிலத்தடித் தாவர டூமார்ட் இனமாக, சில நூலாசிரியர்களால் கருதுகின்றனர். காட்சியகம்
பயன்கள்
வரலாறு![]() ஆரம்ப காலங்களில் இத்தாவரம், ஒரு காய்கறியாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனுடைய மென்மையான சுவைமணத்திற்காகவும் சிறுநீர்ப்பெருக்கி பண்பிற்காகவும் இந்த தாவரத்தை பயன்படுத்தினர். பழைய காலத்து உணவு செய்முறை புத்தகத்தில் அசுபாரகசினைச் சமைக்கக் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பெயர் அபிசியசின் மூன்றாவது நூற்றாண்டு ஏ.டி De re coquinaria, புத்தகம் III ஆகும். இந்த தாவரம், பண்டைய கால எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமர்கள் ஆகியோரால் பயிரிடப்பட்டு வந்தது. இந்த தாவரத்தின் பருவக்காலத்தின் போது, இதை அப்படியே உண்டனர். இந்த காய்கறி உலர்த்தப்பட்டும் பயன்படுத்தப்பட்டது. இடைக்காலத்தின் போது இந்த தாவரம் பிரபலமாக இல்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் மறுபடியும் பயன்படுத்தப் பட்டது [8] சமையல்அசுபாரகசின் இளம் தளிர்கள் மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளப் படுகிறது. அசுபாரகசின் அடிப்பகுதியில் மண்ணும் அழுக்கும் இருக்கும். இதன் காரணத்தினால் அஸ்பாரகஸை சமைப்பதற்கு முன்னதாக நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இத்தாவர தளிர்கள் பல வகைகளாக சமைக்கப்பட்டு, உலக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அசுபாரகசு, ஆசியர்களின் சமையல் பாணியில், பொறியல் வகையைப் போல, பொரிக்கப்பட்டு உண்ணப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள கேண்டனீசு (சீனாவின் பேசப்படும் ஒரு மொழி) உணவகங்களில், இத்தாவரம், வறுத்த பொரியலாக கோழி இறைச்சி, இறால் அல்லது மாட்டிறைச்சி ஆகியவற்றுடன் சேர்த்து சமைத்து கொடுக்கப்படும். பன்றி இறைச்சியினுள் வைக்கப்பட்டும் சமைத்து கொடுக்கப்படும். இதனை, அடுப்புக்கரி அல்லது வன்மர தணல்களிலும், சுடப்படும் முறையில் சீக்கிரமாகவே சமைத்திடலாம். ஒரு சில கஞ்சி வகைகளிலும், சூப்புகளிலும் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. பிரெஞ்சு பாணியில், இது கொதிக்கவைத்தோ, வேகவைத்தோ, "ஆலண்டைசு" (முட்டை, வெண்ணெய் மற்றும் எலுமிச்சை கலந்தது) சுவைச்சாறு, உருகிய வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், பார்மிசன் பால்கட்டி அல்லது மயோனெய்சு ஆகியவற்றுடன் சேர்த்து உணவாக வழங்கப்படும். உணவுக்குப் பின் கொடுக்கப்படும் இனிப்பு வகையிலும் இது பயன்படுத்தப்படலாம்.[9] ஆரம்பநிலையில் வளரும் (பருவத்தின் போது வளரும் முதல் விளைச்சல்) அசுபாரகசு தான் மிகவும் சிறந்ததாக இருக்கும். இது அதிகமான நேரங்களில், வேகவைக்கப்பட்டும் உருகிய வெண்ணெயுடனும் சேர்த்து உணவாக வழங்கப்படும். உயரமான மற்றும் குறுகிய அசுபாரகசு சமையல் பானைகளில், தளிர்கள் மென்மையாக வேகவைக்கப்படும். அதனுடைய முனைகள் தண்ணீருக்கு வெளியே இருக்கும் படி வேகவைக்கப்படும். இது ஊறுகாய்களாகவும் தயாரிக்கப்படுகிறது. இது பல வருடங்களுக்கு சேமித்தும் வைக்கப்படுகிறது. சில தயாரிப்பு வகைகளில், தளிர்கள் "மாரினேட்டட்" (உப்பு தடவப்பட்ட நிலை) முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது என்று விவரச்சீட்டில் குறிப்பிடலாம். உலகளவில், பச்சை அசுபாரகசு உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அசுபாரகசு அதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், முந்தைய காலங்களில் விரும்பி சாப்பிட்ட உணவாக, தற்போது அது எடுத்துக்கொள்ளப்படவில்லை.[6] எனினும், பிரிட்டன் போன்ற நாடுகளில், அசுபாரகசு, குறுகிய காலகட்டத்தில் மட்டுமே வளர்கிறது. உள்ளூர் பகுதிகள் விளைச்சல் குறைவாக இருப்பதனால், அதனுடைய தேவையும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணத்தினால், அசுபாரகசு சிறப்பு வாய்ந்ததாகவும், "உணவு நாட்காட்டியில், அசுபாரகசு பருவக்காலம், மிகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது".[10] வடக்கு ஐரோப்பா கண்டப் பகுதிகளில் விளையும் வெள்ளை அசுபாரகசு, மிகவும் சிறந்த மற்றும் முக்கிய காய்கறியாக கருதப்படுகிறது. இதன் காரணத்தினால், இந்த வகை அசுபாரகசை, "வெள்ளைத் தங்கம்" என்று செல்லப் பெயரிட்டும் அழைக்கின்றனர். மருத்துவம்இரண்டாம் நூற்றாண்டு மருத்துவரான காலென், அசுபாரகசை, "சுத்தப்படுத்தும் மற்றும் குணமாக்கும்" திறனுடையது என்று விவரித்துள்ளார். அசுபாரகசில் குறைவான கலோரியும், ஃபோலேட்டு, பொட்டாசியம் நிறைந்தும் உள்ளது என்று ஊட்டச்சத்து ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதனுடைய தண்டுகளில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள் அதிகமாக உள்ளன. இதய நோய் உருவாவதற்கு காரணமாக இருக்கும், ஹோமோசிஸ்டைனை, ஃபோலேட் மட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. ஃபோலேட் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், ஃபோலேட், குழந்தைகளின் நரம்பு சார்ந்த குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதிகமான பொட்டாசியம் எடுத்துக்கொள்வதனால், உடலில் உள்ள கால்சியம் இழப்பு குறைக்கப்படுகிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அசுபாரகசு முக்கியமான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கிறது: அசுபாரகசின் ஆறு காய்களில், 135 மைக்ரோகிராம் ஃபோலேட்டு, ஒரு வயதுவந்தவரின் RDIல் பாதியளவு (பரிந்துரைக்கப்பட்ட தினசரி உணவு), 545 μg பீட்டா கரோட்டுன் மற்றும் 20மிகி பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளதாக, ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கைக் கூறுகிறது. குறிப்பாக, பச்சை அசுபாரகசில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இணைப்புத்திசு வெண்புரதம் உடலில் உற்பத்தியாவதற்கும், அதனை தக்கவைத்துக்கொள்வதற்கும் வைட்டமின் சி உதவியாக இருக்கிறது. உடலில் உள்ள எல்லா செல்களையும், திசுக்களையும் ஒன்றுசேர்த்த, இணைப்புத்திசு வெண்புரதம் உதவியாக இருக்கிறது. இதன் காரணத்தினால், இது அதிசயப் புரதம் என்று கருதப்படுகிறது. அசுபாரகசில் உள்ள சத்துப்பொருள், சிறுநீர்ப்பெருக்கியாக செயல்புரிகிறது; நம்மை சோர்வுப்படுத்தும் அம்மோனியாவை, நடுநிலைப்படுத்துகிறது. சிறிய இரத்த குழல்களில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதனுடைய நார் சத்து, மலமிளக்கியாகவும் செயல்புரிகிறது. சிறுநீர்
மார்செல் ப்ராவுஸ் என்பவர், "அசுபாரகசு, என்னுடைய அடுப்பு பானையை வாசனை குடுவையாக மாற்றிவிட்டது" என்று குறிப்பிட்டிருந்தார்.[12] அசுபாரகசை உண்டவர்களில் சிலருக்கு, நாற்றத்துடன் கூடிய சிறுநீர் வெளியானது. சிலருக்கு அது போன்று வெளியாகவில்லை என்று கருதப்பட்டது. எனினும், 1980 ஆம் ஆண்டுகளில் பிரான்சு,[13] சீனா, இசுரேல் நாடுகளில் செய்த மூன்று ஆய்வுகளில், அசுபாரகசினால் ஏற்படும் நாற்றத்துடன் கூடிய சிறுநீர், உலகளவில் மனிதர்களுக்கு உள்ளதாக ஆய்வு முடிவில் வெளியிடப் பட்டது.[14] இதன் மூலம், அசுபாரகசை உண்கிற பெரும்பாலான மக்களுக்கு நாற்றம் நிறைந்த சேர்மம் உடலில் உற்பத்தியாகிறது என்பது உண்மையாகிவிட்டது. ஆனால் 22 சதவீதம் மக்களுக்கு மட்டுமே, அந்த நாற்றத்தை மோப்பம் பிடிப்பதற்கு தேவையான மரபணுக்கள் உள்ளன என்பதும் இந்த ஆய்விலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.[15][16][17] சிறுநீர் வேதிப்பொருட்கள்இது குறைவான கலோரியை உடையதாக உள்ளது. இதில் கொழுப்பு சத்து இல்லை. இதில் மிகவும் குறைந்த அளவு சோடியம் இருப்பதனால், இது ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது. அசுபாரகசில், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், நார் சத்து உணவு, ரூட்டன் ஆகியவை உள்ளது. இதிலிருந்து அமினோ அமில அசுபாரசின் என்று பெயரைப் பெற்றது. இது போன்ற சேர்மங்கள் இத்தாவரத்தில் மிகவும் அதிகமாக உள்ளன. அசுபாரகசில் உள்ள சில சேர்மங்கள் வளர்சிதை மாற்றமடைந்து சிறுநீருக்கு ஒரு வித்தியாசமான நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பலவகையான கந்தகம் கொண்டுள்ள, சிதைவு செய்யும் பொருட்களே காரணமாக உள்ளன. இதில் பலவகையான தியோல்கள், தியோ-ஈஸ்ட்டர்கள், அம்மோனியா ஆகியவையும் அடங்கும்.[18] இந்த நாற்றத்திற்கு காரணமாக இருக்கும் விரைவாக ஆவியாகக்கூடிய கரிமக் கூட்டுப்பொருட்களாவன:[19][20]
குறிப்பாக பார்க்கும் போது, முதலில் சொல்லப்பட்ட இரண்டும் மிகவும் காரமான (கடுமையான) நெடித்தன்மை உடையதாக உள்ளவை ஆகும். கடைசி இரண்டும் (சல்ஃப்ர்-ஆக்ஸிடைஸ்டு) வாசனையான நறுமணத்தை கொடுக்கும் தன்மையுடையதாக உள்ளது. இச்சேர்மங்கள் அனைத்தும் சேர்ந்து, சிறுநீர் நாற்றத்தைக் கொடுக்கிறது. இது 1891 ஆம் ஆண்டில் மெர்சிலி நென்கி என்பவரால் முதன் முதலாக ஆராய்ச்சி செய்தார்.. இவர் இந்த வாசனையை மித்தெனெத்தியாலுடன் தொடர்புப்படுத்தி விளக்கினார்.[21] இந்த சேர்மங்கள் அசுபாரகசிக் அமிலமாக அசுபாரகசில் வினைப்புரிய தொடங்குகின்றன. ஏனெனில் இது அசுபாரகசிற்க்கு ஒத்திருக்கும் கந்தகம் அடங்கிய சேர்மங்களாகும். இவை இளந்தாவரத்தில் அதிகமாக இருப்பதனால், அதனை உண்ட பிறகு, இந்த நாற்றம் மிகவும் அதிகமாக ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டது. வளர்ச்சிதை மாற்றம்இதனை உண்ட பிறகு 15 முதல் 30 நிமிடங்களிலேயே சிறுநீரில் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.[22]வாட்டர்லூவில், டாக்டர். ஆர்.மெக்கலெல்லன் என்பவரால், இந்த ஆராய்ச்சி சரிபார்க்கப்பட்டது. பயிரிடுதல்கடல்சார்ந்த பகுதிகளில் தான் அசுபாரகசு அதிகமாக வளரும் தன்மையுடையதாக இருக்கிறது. இந்த செடி சாதாரணமாகத் மற்ற புற்பூண்டுகள் வளராத மண்ணில் தழைத்தோங்குகிறது. ஏனெனில், அசுபாரகசு விளையும் நிலம் மிகவும் உப்பு நிறைந்ததாக இருக்கும். உப்புத்தன்மை நிறைந்திருக்கும் இந்த நிலத்தில் களைகளால் வளரமுடியாது. அசுபாரகசு மற்ற நிலங்களில் பயிரிடப்படும் போது, களைகள் வளராமல் இருப்பதற்கு, நிலத்தில் உப்பு சேர்க்கப்படுகிறது. இதனால் வேறு எந்த பயிரும் இந்த நிலத்தில் வளர்க்கப்பட முடியாது. மண்ணின் வளமை, அசுபாரகசு வளர்வதற்கான மிகப்பெரிய காரணியாக இருக்கிறது. "தாவர முகடுகள்" குளிர்காலத்தில் நடப்படுகின்றன. அதனுடைய முதல் தளிர்கள், வசந்தக்காலத்தில் மட்டுமே தோன்றும். முதலில் எடுக்கப்படும் அல்லது "பயிர்கலைக்கப்படும்" செடி சிப்ரூ அசுபாரகசு என்று அழைக்கப்படுகிறது. ஸ்ப்ரூவிற்கு மெல்லிய தண்டுகள் உள்ளன.[23] வெள்ளை அசுபாரகசை, ஸ்பார்ஜெல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தாவரங்கள், சூரிய ஒளி கொடுக்கப்படாமல் புற ஊதா ஒளி அதிகமாக கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இது பச்சை வகையை விட, கசப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும். இது நெதர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. அந்த நாடுகளில் எல்லாம் வருடத்திற்கு 57,000 டன்கள் (நுகர்வோர் தேவைகளில் 61% ) உற்பத்தி செய்யப்படுகின்றன.[24] ஊதா நிற அசுபாரகசு, பச்சை மற்றும் வெள்ளையிலிருந்து சிறிது வேறுபட்டு காணப்படுகிறது. இதில் நார் சத்து குறைவாகவும், சர்க்கரையின் அளவு அதிகமாகவும் காணப்படுகிறது. ஊதா நிற அசுபாரகசு இத்தாலியில்தான் முதலில் மேம்படுத்தப்பட்டது. வைலெட்டோ டி'அல்பெங்கா என்ற பெயர் வகையில்தான் வெளியிடங்களில் விற்கப்படுகிறது. வடமேற்கு ஐரோப்பாவில், அசுபாரகசு உற்பத்திப் பருவம் மிகவும் குறுகியக்காலம் வரைதான் இருக்கும். வழக்கமாக, ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி ஆரம்பித்து வெயில் காலத்தின் நடுவில் உள்ள ஒரு நாளில் முடிந்துவிடும்.[25] சக பயிர்வகைகள்அசுபாரகசை தக்காளிகளுடன் சேர்த்து பயிரிடுதல் பயனுள்ளதாக உள்ளது. இதனால் தக்காளி செடி, அசுபாரகசைத் தாக்கும் வண்டுகளை தடை செய்கிறது. தக்காளியுடன் சேர்த்து பயிரிடப்படும் மற்ற செடிகளுக்கும் இதே போன்ற பாதுக்காப்பையேத் தருகிறது. அதே சமயத்தில் அசுபாரகசும், தக்காளி செடிகளை பாதிக்கும் சில தீங்கு விளைவிக்கக்கூடிய வேர் உருளைப்புழுக்களையும் தடுக்கலாம் என நம்பப் படுகிறது.[26] வணிகம்2007 ஆம் ஆண்டு வரை, உலகத்திலேயே அசுபாரகசு ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் நாடு பெரு நாடாகும். அதற்கு அடுத்த நிலையில், சீனா, மெக்ஸிக்கோ உள்ளது.[27] அசுபாரகசு இறக்குமதியில் (2004) முதன்மை இடத்தில் இருந்த நாடு, அமெரிக்காவாகும் (92,405 டன்கள்). அதற்கு அடுத்தடுத்த இடங்களில், யூரோப்பியன் யூனியன் (வெளிப்புற வணிகம்) (18,565 டன்கள்), ஜப்பான் ஆகிய நாடுகள் (17,148 டன்கள்) இருந்தன.[28] 2005ல் ஐக்கிய அமெரிக்காவின் உற்பத்தி 218.5 சதுர கிலோமீட்டர்கள் (54,000 ஏக்கர்கள்) ஆக இருந்தது. அந்த உற்பத்தியில் 90,200 டன்கள் விளைச்சல் கிடைத்தது.[29] இதன் மூலம் உலகத்திலேயே மூன்றாவது மிகப்பெரிய உற்பத்தியாளர் என்ற பட்டத்தை அமெரிக்கா பெற்றது. சீனா (5,906,000 டன்கள்) மற்றும் பெரு (206,030 டன்கள்) ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களை பிடித்தன.[30] இங்கு ஸ்டாக்டன் போலவே விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழா, ஒவ்வொரு ஆண்டும், ஒரு முழு வாரமும் கொண்டாடப்படும். அதில் சிறந்த பயிர் ஏலமிடப்படும். ப்ரிட்டிஷ் அசுபாரகசு விழாவில் பங்கெடுத்துக்கொள்ளும் வகையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் அசுபாரகசின் தண்டைப் போன்றே உடை அணிவார்கள்.[31] நியூரெம்பர்கின் பாவரியன் நகரத்திலும் இதே போன்று நகர விழா கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில், இந்த விழா, ஒரு வாரம் வரை நடத்தப்படும். அந்த நகரத்தின் பகுதியில் உற்பத்தியாகும் வெள்ளை அசுபாரகசு அதாவது "ஸ்பார்ஜெல்" விளைச்சலைக் கொண்டாடும் வகையில், இந்த விழா கொண்டாடப்படுகிறது.ஸ்பார்ஜெல்லை யார் மிகவும் வேகமாக உரிப்பார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு போட்டி நடத்தப்படும். அந்த போட்டியின் பங்கேற்பாளர்களை பாராட்டி ஆதரவளிப்பதற்காக, மக்கள் உள்ளூர் மதுபானங்களையும், பீரையும் தாராளமாக அருந்துவார்கள்.[32] மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia