இசை வேளாளர்
இசை வேளாளர் (Isai Vellalar) (முன்பு தேவதாசி என்று அழைக்கப்பட்டனர்) என்பது தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதியைக் குறிக்கும். இந்த சாதியினர் மேளக்காரர் என்ற பெயரிலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை அழைக்கப்பட்டனர். சின்னமேளம், பெரியமேளம் மற்றும் நட்டுவாங்கம் என்பவை இச்சாதியின் உட்பிரிவுகளாகும். இசை வேளாளர் தமிழக அரசின் இடஒதுக்கீட்டுப் பட்டியலில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர்.[2] பெயர் மாற்றமும் பெயரியலும்1930களில் தேவதாசிகள் சமூகத்தை சேர்ந்தவர்கள், தங்களை இசை வேளாளர்கள் என பெயர் மாற்றிக்கொண்டனர்.[3][4] தங்களை இசையை குலத்தொழிலாகக் கொண்டதினால், இவர்களுக்கு இசை வேளாளர்கள் என்ற பெயர் வந்தது. இவர்களுள் பெரும்பாலானவர்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இசையின் வாய்ப்பாட்டு, நரம்புக்கருவி, தோல்கருவி, நடனம் எனப் பல துறைகளில் பல இசை வேளாளர்கள் பெயர் பெற்றுள்ளனர். வரலாறுஇசை வேளாளர் சமூகத்தினர் முதலில் நாடோடிகளாக இருந்தனர்.[5] பாணர்களுக்குரிய மரபு ஆரம்பகால சங்க இலக்கியங்களிலும் பல்லவர் மற்றும் பாண்டியர் காலத்திலும் குறிப்பிடப்படுகின்றன. இவை முதன்மையாக சடங்கு மற்றும் காவல் இயல்புடையவை. சோழர் மற்றும் விஜயநகர காலத்தில் இசை மற்றும் நடனத்தின் கலையாற்றல் வலுப்பெற்றது. முற்கால சோழர் கல்வெட்டுகள் தேவரடியாரை கோயில்களில் உணவுப் பிரசாதம் மற்றும் சடங்கு செய்பவர்கள் என்று குறிப்பிடுகின்றன, மேலும் இது மரியாதைக்குரிய மற்றும் உயர்ந்த பொருளைக் கொண்ட ஒரு சொல்.[6] கல்வெட்டுச் சான்றுகளின் படி, தேவதாசிகள் சொத்துக்களைக் கொண்டிருந்தனர் (கோயில்களுக்குப் பெரிய அளவில் நிலங்களை நன்கொடையாக அளித்தனர்) மேலும் சமுதாயத்தில் ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்று வந்த சுயாதீனமான தொழில் வல்லுநர்களாக இருந்ததைக் குறிக்கிறது. பெருவுடையார் கோயிலுக்கு சேவை செய்ய தேவராட்டியார் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு கோயிலுக்கு அருகில் நிலம் வழங்கப்பட்டது என்று முதலாம் ராஜராஜனின் 11ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கூறுகிறது.[7] தஞ்சாவூர் நாயக்கர்களின் மற்றும் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களின் ஆதரவின் கீழ், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரத்திலிருந்து தெலுங்கு இசைக்கலைஞர்கள் தஞ்சாவூர் பிராந்தியத்துக்கு குடிபெயர்ந்தனர். எனவே தஞ்சாவூர் மேளக்காரர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மேளக்காரர்கள் என இரு வேறுபட்ட மொழிக் குழுக்களாக உள்ளனர்.[8] குடிமைப்பட்ட கால இந்தியா காலத்தில், கோயில் புரத்தல் நிலையில் ஏற்பட்ட பெரும் இழப்பானது, தேவரடியார் அவர்களின் சமூக அந்தஸ்திலிருந்து கீழிறங்கினர். இதனால் அவர்கள் தங்கள் வருமானத்துக்கு பிற வழிகளைத் தேடத் துவங்கினர்.[7] சமூக சீர்திருத்தவாதிகளான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் ஆகியோரின் முயற்சிகளால் மேளக்காரர் சமூகத்தினரிடையேயிருந்த தேவதாசி முறை ஒழிப்பிற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் துவங்கின. நாட்டின் கலையையும், பண்பாட்டையும் காப்பதற்கு ஒரே வழி தேவதாசி முறையைத் தக்க வைத்திருப்பதே என்ற கருத்திற்கு, மறுமொழியாக
என்று முத்துலட்சுமியை சட்டமன்றத்தில் பேசவைத்தவர் மூவலூர் ராமாமிர்தம். இதன் பிறகு இசை மற்றும் நடனத்தில் தமிழ்ப் பிராமணர்கள் நுழைந்து அவற்றைக் கைப்பற்றத் தொடங்கினர். இது கலை வடிவங்களை பாரம்பரியமாக பயின்றுவந்த இந்த கலைஞர்களுக்கு அச்சுறுத்தலாக ஆனது. இது பாரம்பரியமாக இசை மற்றும் நடனத்துடன் தொடர்புடைய சமூகங்கள் அரசியல் மயமாக்கப்பட்ட பிராமணர் அல்லாத சாதி சங்கமாக உருவாகத் தொடங்கியது. அதை அவர்கள் "இசை வேளாளர் சங்கம்" என்று உருவாக்கி, அதன் மூலம் ஒரு அரசியல் ஒருங்கிணைந்த அடையாளத்தை உருவாக்கினர்.[8] இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாதஸ்வரம், தவில் வாசிக்கும் கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது என்றிருந்த சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையைப் பெற்றுத்தந்தார்.[சான்று தேவை] எதிர் குரல்கள்தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது இசை மற்றும் நடனத்தையே தொழிலாகக் கொண்டிருந்தவர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை. பரம்பரை பரம்பரையாக நடனமாடி வந்தவர்கள், இனி பொதுவெளியில் நடனம் ஆடினால், அவர்கள் பாலியல் தொழிலாளியாக கருதி தண்டனை அளிக்கட்டும் என்று சட்டம் சொன்னது. ஆனால் அதையே உயர் சாதியைச் சேர்ந்த பிராமணர்கள் செய்ய வந்தபோது அவர்கள் கலையை மீட்க வந்தவர்கள் என்று போற்றப்பட்டனர். இந்த முரண்பட்ட நிலைக்கு பின்னால் அரசியல் இருந்தது என்றும், தங்களிடம் இருந்து தங்கள் பாரம்பரிய கலையான பரதநாட்டியம் பறிக்கப்பட்டது என்ற குரல்கள் நிருத்யா பிள்ளை போன்றவர்களால் எழுப்பப்படுகிறது.[9] [10] [11] பிரிவுகள்தஞ்சாவூர் பகுதிகளில் இசை வேளாளர்கள் தங்களை மேளக்காரர் என்று அழைத்துக்கொண்டனர். மேலக்காரர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மேளக்காரர் என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழ்ந்தனர்.[12][13] தெலுங்கு மேளக்காரர்கள் தஞ்சை நாயக்கர் ஆட்சி மற்றும் தஞ்சை மராத்திய அரசு காலத்தில், ஆந்திரா மற்றும் மகாராட்டிரம் ஆகிய பகுதிகளில் இருந்து, தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்தனர்.[14] தெலுங்கு மேளக்காரர்கள் எனும் தெலுங்கு இசை கலைஞர்கள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் பகுதிகளில் கணிசமாக இருந்துள்ளனர்.[15] தெலுங்கு மேளக்காரர்கள் முடி திருத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.[16] குறிப்பிடத்தக்க நபர்கள்வரலாற்று காலத்தவர்கள்அரசியல்வாதிகள்
வர்த்தகத் துறை
சமூக ஆர்வலர்கள்திரைப்படத்துறை
வாய்ப்பாட்டு
நாதசுர வித்துவான்கள்
தாள வாத்தியம்
தவில் வித்துவான்கள்
நட்டுவனார்கள்
நடனக் கலைஞர்கள்
இசை வேளாளரை மூதாதையராகக் கொண்டோர்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia