சிம்டேகா
சிம்டேகா (Simdega), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த சிம்டேகா மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். சோட்டா நாக்பூர் மேட்டு நிலத்தின் தென்மேற்கில் அமைந்த சிம்டேகா நகரம், கடல் மட்டத்திலிருந்து 415 மீட்டர் (1371 அடி) உயரத்தில் உள்ளது. இந்நகரம் விளையாட்டுகளின் நாற்றங்கால் என்ற பெருமை கொண்டது.[2] மாநிலத் தலைநகரம் ராஞ்சி 143 கிலோ மீட்டர் தொலைவிலும், ரூர்கேலா நகரம் 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இம்மாவட்டத்தில் ஒடியாப் பண்பாட்டின் தாக்கம் அதிகம் கொண்டது. இந்நகரத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 18 வார்டுகளும், 8,252 வீடுகளும் கொண்ட சிம்டேகா பேரூராட்சியின் மக்கள் தொகை 42,944 ஆகும். அதில் 21,884 ஆண்கள் மற்றும் பெண்கள் 21,060 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 962 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5421 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,923 மற்றும் 19,920 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 41.07%, இசுலாமியர் 15.78%, கிறித்தவர்கள் 37.81% மற்றும் பிறர் 5.41% ஆகவுள்ளனர்.[3] கல்விஇந்நகரத்தில் கத்தோலிக்க கிறித்துவ சபைகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளது. விளையாட்டு![]() சிம்டேகா நகரம், ஜார்கண்ட் மாநிலத்தின் ஹாக்கி விளையாட்டின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில், ஹாக்கி விளையாட்டில் இந்நகரத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சைல்வனுஸ் துங் தஙகப்பதக்கம் பெற்றார். மற்றொரு ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டு வீரர் மைக்கேல் கிண்டோ, 1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டில் பங்கு பற்றினர். இந்நகரத்தைச் சேர்ந்த அசுந்தா லக்ரா பெண் விளையாட்டு வீராங்கனை இந்தியாவின் ஹாக்கி அணியின் கேப்டனாக விளையாடினார்.[4] இந்நகரத்தில் அஸ்டிரோடர்ப் ஹாக்கி விளையாட்டரங்கம் அண்மையில் நிறுவப்பட்டது.[5] ஆல்பர்ட் எக்கா விளையாட்டரங்கம் பிற வெளிப்புற விளையாட்டுகளுக்கு பயன்படுகிறது. புவியியல் & தட்ப வெப்பம்சிம்டேகா நகரம் 22°37′N 84°31′E / 22.62°N 84.52°E பாகையில் உள்ளது.[6] இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 418 மீட்டர் (1371 அடி) உயரத்தில் உள்ளது. ![]() இதன் கோடைக்கால அதிகபட்ச வெப்பம் 33.0 °C; குளிர்கால குறைந்த வெப்பம் 17.9 °C; ஆண்டின் ஆகஸ்டு மாத மழைப்பொழிவு 410 mm ஆகும்.[7] பொருளாதாரம்மலைப்பாங்கான பகுதியில் அமைந்த சிம்டேகா நகரத்தின் முக்கியத் தொழில் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பாகும். கனிம வளம், வைரம் தோண்டுதல் மற்றும் எரிசக்தி திட்டங்கள்
செல்லாக் பசை![]() சிம்டேகா நகரத்தில் செல்லாக் எனும் பசை உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. போக்குவரத்துசிம்டேகா நகரம் ஜார்கண்ட்-ஒடிசா-சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ளது. சிம்டேகாவிலிருந்து அண்டை நகரங்களுக்குச் செல்லும் தொலைவுகள்:
சுற்றுலா![]() ![]() ![]()
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia