சிரித்து வாழ வேண்டும்
சிரித்து வாழ வேண்டும் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பாலசுப்பிரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1973 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த இந்தித் திரைப்படமான சஞ்ஜீர் என்ற படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1] இப்படம் 30 நவம்பர் 1974 அன்று வெளியானது.[2] திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.[3] கதைராமுவின் குழந்தைப் பருவத்தில் அவன் கண்ணெதிரே அவனது பெற்றோர் கொள்ளைக் கூட்டத்தினரால் படுகொலை செய்யப்படுகின்றனர். கொலைகாரனின் கையில் உள்ள சங்கிலியில் தொங்கும் குதிரை பொம்மை அவன் மனதில் பதிந்துவிடுகிறது. அந்த பயங்கரமான இரவின் நினைவோடு அவன் வளர்கிறான். ராமு வளர்ந்து காவல் ஆய்வாளராக ஆகிறான். கொள்ளைக் கூட்டத்தின் சமூக விரோத செயல்கள் அதிகரிக்கின்றன. அந்தக் கொள்ளைக்கூட்டத்தின் தலைவனை ராமு சந்தித்து எச்சரிக்கிறான். இறுதிக் காட்சியில் கொள்ளைக் கூட்டத் தலைவனின் கையில் குதிரை பொம்மை கொண்ட கை சங்களியைக் காண்கிறான். இவன்தான் தன் பெற்றோரை கொன்றவன் எனபதை அதன் மூலம் அறிகிறான். இறுதியில் தன் பெற்றோரைக் கொன்ற அவனை பழிவாங்குகிறான். நடிகர்கள்
பாடல்இப்படதிற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார்.[5]
வரவேற்புகல்கியின் காந்தன், படத்தின் தலைப்புக்கு ஏற்றதாக, பார்வையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்ய படத்தில் எதுவும் இல்லை என்றார்.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia