சிறில் மத்தியூ
களுவாதுவாகே சிறில் மத்தியூ (Caluadewage Cyril Mathew, 30 செப்டம்பர் 1912 – 17 அக்டோபர் 1989) இலங்கை சிங்கள அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற[1] களனித் தொகுதி உறுப்பினரும்,[2] ஜே. ஆர். ஜெயவர்தனாவின் 1977 அமைச்சரவையில் அமைச்சரும் ஆவார். அரசியலில்மத்தியூ ஐக்கிய தேசியக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக 1956 முதல் 1967 வரை பணியாற்றினார். பின்னர் அவர் அன்றைய கட்சித் தலைவரும் பிரதமருமாக இருந்த டட்லி சேனாநாயக்கவுடன் முரண்பட்டு பதவியில் இருந்து விலகினார்.[3] இவர் சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுவீர் என்ற நூலை எழுதி சிங்களவர்களை தமது உரிமைகளைக் காக்க வரும் படி அறைகூவல் விடுத்தார். மத்தியூ ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 1977 நாடாளுமன்றத் தேர்தலில் களனித் தொகுதியில் போட்டியிட்டு 56.04% வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] இவர் இலங்கைத் தமிழர்களின் அரசியலில் கடும்போக்கைக் கடைப்பிடித்தார்.[5] 1977 இல் ஜே. ஆர். ஜெயவர்தனாவின் அமைச்சரவையில் இடம்பெற்றார்.[6] 1983 சூலை தமிழருக்கு-எதிரான வன்முறைகளுக்கு இவரும் ஒரு முக்கிய பொறுப்பாளியாக இருந்தவர் என இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.[7][8] 1984 இல் தமிழ் சிறுபான்மையினரின் குறைகளைத் தீர்ப்பதற்காக ஜெயவர்த்தன அழைத்த மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்ததன் பின்னர் இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, ஆளும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.[9] ஜயவர்தாவிற்குப் பின்வந்த அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசா இவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். 1989 அக்டோபர் 17 இல் இவர் மாரடைப்பால் காலமானார். இவரின் மகன் நந்தா மத்தியூ ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து,[10] பின்னர் பல அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தார்.[11] இவர் பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராசபக்ச ஆட்சிக் காலத்தில் ஊவா மாகாண ஆளுனராகப் பதவி வகித்தார். இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia