டிக்கிரி பண்டா சுபசிங்க
டி. பி. சுபசிங்க என அழைக்கப்படும் சுபசிங்க முதியான்சிலாகே டிக்கிரி பண்டா சுபசிங்க (Subasinghe Mudiyanselage Tikiri Banda Subasinghe, 14 ஆகத்து 1913 - 1995) இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்றத்தின் 7வது சபாநாயகராகவும், சோவியத் ஒன்றியத்துக்கான தூதுவராகவும் பணியாற்றியவர்.[1][2] இவர் தொழிற்சாலைகள் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[3] சுபசிங்க லங்கா சமசமாஜக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராவார். இடதுசாரிகள் இணைந்து நடத்திய சூரிய-மல் இயக்கத்தில் இணைந்து போராடியவர்.[1] சுபசிங்க லங்கா சமசமாஜக் கட்சியின் வேட்பாளராக 1947 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] மீண்டும் 1952 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] 1956 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.[6] சாலமன் பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் இவர் பாதுகாப்பு, மற்றும் வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1][3] மார்ச் 1960 தேர்தலில் கட்டுகம்பொலை தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து,[7] நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்டார். நான்கு மாதங்களின் பின்னர் நடைபெற்ற சூலை 1960 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[8] 1961 ஆம் ஆண்டில் இவர் சோவியத் ஒன்றியத்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். 1965 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[9] 1970 தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[10] 1977 தேர்தலில் போட்டியிட்டுப் பெரும் தோல்வியடைந்தார்.[11] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia