சிறீ வெங்கடேசுவரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்
![]() சிறீ வெங்கடேசுவரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் (Sri Venkateswara Veterinary University) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் அமைந்துள்ள மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 2005ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசால் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம்கால்நடை மருத்துவப் படிப்பு மற்றும் ஆய்வில் கவனம் செலுத்துகிறது. வரலாறுசிறீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் 1955-ல் பாபட்லாவில் கால்நடை அறிவியல் கல்லூரியை நிறுவியதன் மூலம் தொடங்கியது. பின்னர் 1957-ல் திருப்பதிக்கு மாற்றப்பட்டது. செப்டம்பர் 2004-ல் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது, அப்போதைய ஆந்திரப் பிரதேச முதல்வர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதாக அறிவித்தார். இக்கல்லூரி பல்கலைக்கழகமாக மார்ச் 30, 2005 அன்று நிறைவேற்றப்பட்ட சிரீ வெங்கடேசுவரா கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்டம், 2005[1] மூலம் செயல்பாட்டிற்கு வந்தது. 2005 ஜூலை 15 அன்று எ. சா. ராஜசேகர் ரெட்டியால் இப்பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. ஆச்சார்யா என். ஜி. ரங்கா வேளாண்மைப் பல்கலைக்கழக கால்நடை அறிவியல் துறையின் செயல்பாடுகளை இப்பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.[2] துணை வேந்தர்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் அவர்கள் பொறுப்பேற்ற நாளுடன்:[2]
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia