ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
![]() இந்திய மாநிலமான, ஆந்திரப் பிரதேசத்தின் மாநில முதலமைச்சர்களின் பட்டியல் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது. 1953 இல் சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற ராயல்சீமா மற்றும் ஆந்திரப் பகுதிகள் இணைந்து “ஆந்திர மாநிலம்” என்ற மாநிலம் உருவானது. 1948இல் ஐதராபாத் நிஜாமிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியான தெலுங்கானா, 1956 இல் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேசம் உருவானது. தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி, 30 மே 2019 முதல் பதவியில் உள்ளார். ஆந்திர மாநில முதலமைச்சர்கள்சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற தெலுங்கு பேசும் மாவட்டங்கள் அடங்கிய இராயலசீமை மற்றும் கடற்கரை ஆந்திரா பகுதிகளைக் கொண்டு 1953இல், ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்![]() 1956இல் மாநில சீரமைப்பின் போது ஐதராபாத் மாநிலத்தின் குல்பர்கா மற்றும் அவுரங்காபாத் பிரிவுகள் முறையே மைசூர் மாநிலம் மற்றும் பம்பாய் மாநிலம் அகியவற்றுடன் இணைந்தன. அதன் எஞ்சிய பிரிவுகள், ஆந்திர மாநிலத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசம் உருவானது.
ஆந்திரப்பிரதேசத்திலிருந்து, தெலுங்கானா பகுதி சூன் 2, 2014 அன்று அதிகாரபூர்வமாக தனி மாநிலமாக பிரிந்ததை அடுத்து இராயலசீமை, கடற்கரை ஆந்திரா பகுதிகள் மட்டும் புதிய ஆந்திரப்பிரதேசத்தின் பகுதிகளாக மாறின. இம்மாநிலம் சீமாந்திரா என்றும் குறிக்கப்படுகிறது. "
இவற்றையும் பார்க்கவும்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia