சீசியம் பாசுபைடு
சீசியம் பாசுபைடு (Caesium phosphide) என்பது Cs2P5. என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] சீசியம், பாசுபரசு, ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தயாரிப்புவெற்றிடத்தில் தனிம பாசுபரசையும் சீசியத்தையும் சுடுகலனில் சூடுபடுத்துவதால் சீசியம் பாசுபைடு உருவாகும்.:[2]
இதேபோல உருகியநிலை பாசுபரசை சீசியம் ஐதரைடுடன் வினைபுரியச் செய்தாலும் சீசியம் பாசுபைடு உருவாகும்.
இயற்பியல் பண்புகள்சீசியம் பாசுபைடு நாற்கோண கட்டமைப்புடன் P41 என்ற இடக்குழுவில் மஞ்சள் நிறப் படிகங்களை உருவாக்குகிறது.[3] இது 300 ° செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பமடையும் போது பழுப்பு நிறமாகவும், திரவ நைட்ரசனுடன் சேர்த்து குளிர்விக்கும்போது நிறமற்றதாகவும் மாறும். மந்த வாயு வளிமண்டல சூழலில் 650 °செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பமடையும் போது சிதைவடையும். திரவ அமோனியாவில் சீசியம் பாசுபைடு கரையும். வேதியியல் பண்புகள்தண்ணீருடன் வினைபுரியும்போது பாசுபீனையும் ஐதரசனையும் விடுவிக்கிறது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia