சீரியம் சிடீயரேட்டு
சீரியம் சிடீயரேட்டு (Cerium stearate) C54H105CeO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[2][3] சீரியமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என சீரியம் சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[4] தயாரிப்பு100 மற்றும் 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் மந்தவாயு வளிமண்டலச் சூழலில் சிடீயரிக் அமிலத்துடன் சீரியம் ஆக்சைடு வினைபுரிவதால் சீரியம் சிடீயரேட்டு உருவாகிறது.[5] இயற்பியல் பண்புகள்வெண்மை நிற தூளாக சீரியம் சிடீயரேட்டு உருவாகிறது. தண்ணீரில் இது கரையாது. பயன்கள்சீரியம் சிடீயரேட்டு பல்வேறு தொழில்துறை மற்றும் ஆய்வக பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது: ஒரு மசகு எண்ணெயாக ஆக்சிசனேற்றியாக மற்றும் நுரை எதிர்ப்பு முகவராக. பலபடிகளின் தயாரிப்பில் ஒரு வினையூக்கியாகவும் நெகிழிகள் உற்பத்தியில் ஒரு நிலைப்படுத்தியாக என இது பலவாறு பயன்படுத்தப்படுகிறது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia