செரோசீன்
செரோசீன் (Cerocene) என்பது Ce(C8H8)2.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு ஒரு கரிமவுலோக அணைவுச் சேர்மமாகும். செரோசீன், நடுவில் சீரியம் அணுவையும் இரண்டு வளைய ஆக்டாடெட்ராயீனைடு வளையங்களையும் கொண்டுள்ள ஓர் இடையீட்டுச் சேர்மம் ஆகும். தயாரிப்புசீரியம்(III) டை-வளைய ஆக்டாடெட்ராயீன் எதிர்மின் அயனி உப்புகளைக் குறைப்பதன் மூலம் செரோசீனைத் தயாரிக்கலாம்.
வேதிப் பண்புகள்நீர் அல்லது ஆக்சிசனுக்கு வெளிப்படும் போது செரோசீன் சிதைவடைந்து விகிதவியலுக்கு ஒவ்வாத சீரியம்-ஆக்சைடுகள் மற்றும் வளைய ஆக்டா டெட்ராயீன் வழித்தோன்றல்களை உருவாக்குகிறது.[2] இச்சேர்மம் சமச்சீரற்ற ஒரு சிதைவுக்கு உட்படுகிறது. செரோசீனுக்கும் இரண்டு சீரியம் அணுக்களைக் கொண்ட இரட்டை அடுக்கு அமைப்புக்கும் இடையில் ஒரு வேதிச்சமநிலைக்கு வழிவகுக்கிறது.[2]
தொடர்புடைய சேர்மங்கள்செரோசீன் என்பது யுரேனோசீனுக்கு (U(C8H8)2.) அறியப்பட்ட ஒரு முன்னோடியாகும்.[1] Ce(C8H8)2 + UCl3 செரோசீன் பொதுவாக திரிசு(வளையபெண்டாடையீனைல்)சீரியம் சேர்மத்துடன் இணைத்து குழப்பமடையச் செய்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia