சீர்பாதர்
சீர்பாதர் (Seerpadar) எனப்படுவோர் இலங்கையின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில்[1] காணப்படுகின்ற வேளாண்மையை[2] பிரதானமாகக் கொண்ட தமிழ்ச்சமூகத்தினர் ஆவர். வரலாறு![]() சீர்பாதர் அல்லது சீர்பாதகுலம் என்பது சோழ இளவரசி சீர்பாததேவியின் பெயரினைக்கொண்டு பல்வேறு சாதி மக்களை ஒருங்கிணைத்து உருவானதாக கருதப்படுகிறது. இதனை சீர்பாதகுல கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மற்றும் உள்ளூர் நாட்டார் கதைகள் மூலம் அறியலாம்.[3] சீர்பாதகுல செப்பேடுகள்
சீர்பாதகுல மக்கள் வாழும் இடங்கள்பிரதானமாக வீரமுனை, துறைநீலாவணை, குறுமண்வெளி, நாவிதன்வெளி, சேனைக்குடியிருப்பு, மல்வத்தை, தம்பலவத்தை,பாலமுனை,கரையக்கன்தீவு, மண்டூர், மகிழூர் முனை, கல்லோயா குடியேற்றக்கிராமங்கள், 7ம் கிராமம், 11ம் கிராமம், சீர்பாதபுரம் ,13ம் கிராமம், 15ம் கிராமம், 35ம் கிராமம்,6ம் கிராமம், றாணமடு,யானைகட்டிய வெளி,கல்வட்டை,சின்னவத்தை,மல்லிகைத்தீவு,வளத்தாபிட்டி,வீரச்சோலை,திருக்கோவில் பிரதேசத்தில் -கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம்,விநாயகபுரம், இலங்கை,சின்னத்தோட்டம்,தாமரைக்குளம் [1][4] ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். மேலும் இலங்கையின் உள்நாட்டு போர் மற்றும் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். சீர்பாதகுல குடிகள்
குறிப்பிடத்தக்க நபர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia