தவராசா கலையரசன் (Thavarasa Kalaiarasan , பிறப்பு: 16 ஏப்ரல் 1970) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[ 1]
வாழ்க்கைக் குறிப்பு
கலையரசன் 1970 ஏப்ரல் 16 பிறந்தார்.[ 1] இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[ 2] இவர் நாவிதன்வெளி பிரதேச சபையின் தலைவராகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் இருந்தவர்.[ 2] [ 3]
கலையரசன் 2012 மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[ 4] பின்னர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு, கூட்டமைப்பு வேட்பாளர்களில் இரண்டாவதாக வந்தும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[ 5] [ 6] [ 7] இவர் மீண்டும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இம்முறை கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட எவரும் தெரிவு செய்யப்படவில்லை.[ 8] [ 9] ஆனாலும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தமிழர் பிரதிநிதித்துவம் எதுவும் கிடைக்காததால், இவர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்டார்.[ 10] [ 11] [ 12]
2024 நாடாளுமன்றத் தேர்தலில் கலையரசன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு மூன்றாவதாக வந்து தோல்வியடைந்தார்.
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 "Directory of Members: Thavaraja Kalai Arasan" . Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம் . Retrieved 8 September 2020 .
↑ 2.0 2.1 D. B. S. Jeyaraj (22 August 2020). "Future course of defeated ITAK leader “Maavai” Senathirajah" . The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/Future-course-of-defeated-ITAK-leader-Maavai-Senathirajah/172-194345 . பார்த்த நாள்: 8 September 2020 .
↑ "Meet your new parliamentarians" . Sunday Times (Colombo, Sri Lanka). 23 August 2020. http://www.sundaytimes.lk/200823/news/meet-your-new-parliamentarians-2-413457.html . பார்த்த நாள்: 7 September 2020 .
↑ "Preferential votes" . Daily News (Colombo, Sri Lanka). 10 September 2012. http://archives.dailynews.lk/2012/09/10/pol08.asp . பார்த்த நாள்: 8 September 2020 .
↑ "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 1923/3. Colombo, Sri Lanka. 13 July 2015. p. 290A. Retrieved 11 August 2015 .
↑ 6.0 6.1 "Ranil tops with over 500,000 votes in Colombo" . Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo . பார்த்த நாள்: 8 September 2020 .
↑ "Preferential Votes" . Daily News (Colombo, Sri Lanka). 19 August 2015 இம் மூலத்தில் இருந்து 20 August 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2 .
↑ "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981 - Notice Under Section 24(1) (b) and (d)" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 2179/7. Colombo, Sri Lanka. 9 June 2020. p. 320A. Retrieved 10 June 2020 .
↑ "General Election 2020: Preferential votes of Digamadulla District" . Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201001070529/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-digamadulla-district . பார்த்த நாள்: 8 September 2020 .
↑ "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections - 2020 - Declaration under Article 99A of the Constitution" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 2188/2. Colombo, Sri Lanka. 10 August 2020. p. 2A. Retrieved 11 August 2020 .
↑ "National List members of SLPP, AITC, ITAK gazetted" . Ceylon Today (Colombo, Sri Lanka). 11 August 2020 இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210613151647/https://ceylontoday.lk/news/national-list-members-of-aitc-itak-gazetted . பார்த்த நாள்: 8 September 2020 .
↑ "SLPP, ITAK & ACTC National List MPs announced via Extraordinary Gazette" . நியூஸ் பெர்ஸ்ட் (Colombo, Sri Lanka). 10 August 2020. https://www.newsfirst.lk/2020/08/10/slpp-itak-actc-national-list-mps-announced-via-extraordinary-gazette/ . பார்த்த நாள்: 8 September 2020 .
↑ "Ampara preferences" (PDF) . Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 10. Archived from the original (PDF) on 29 April 2014.