சீவான் சந்திப்பு தொடருந்து நிலையம்
சீவான் சந்திப்பு தொடருந்து நிலையம் (Siwan Junction railway station) பீகார் மாநிலத்தில் உள்ள சீவான் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் சீவான் மாவட்டத்தினையும் கோபால்கஞ்ச் பகுதியினையும் இணைக்கின்றது. இது கொல்கத்தா அமிர்தசரசு ராஞ்சி குவகாத்தி இலக்னோ தில்லி, கான்பூர் மற்றும் கோரக்பூர் போன்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் சீவான் மற்றும் கோபால்கஞ்ச் மாவட்ட மக்களுக்குச் சேவை செய்கிறது என்றாலும், அரசியல் காரணங்களால் இந்த நிலையம் எப்போதும் புறக்கணிக்கப்படுகிறது. அதிகார வரம்புஇது பீகாரில் உள்ள சீவான் மாவட்டத்தின் வடகிழக்கு தொடருந்து மண்டலத்தின் வாரணாசி ரயில் பிரிவைச் சேர்ந்தது.[1] இந்த நிலையக் குறியீடு SV.[2] தடம்கோரக்பூர் சந்திப்பு, சப்ரா சந்திப்பு, மகாராஜ்கஞ்ச் சந்திப்பு, மஷ்ரக் சந்திப்பு மற்றும் தாவே சந்திப்பிற்கு மூன்று முக்கிய தொடருந்து தடங்கள் இங்கிருந்துசெல்கின்றன.[1] ரயில்கள்வைசாலி விரைவுவண்டி, பீகார் சம்பர்க் கிரந்தி அதிவிரைவு வண்டி, புது தில்லி - நாகர்லாகுன் அதிவிரைவுவண்டி, மயுரியா விரைவுவண்டி முதலியன சீவான் தொடருந்து நிலையம் வழியாகச் செல்லும் சில முக்கியமான இரயில்களாகும். கேலரி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia