சூரியன் சட்டக் கல்லூரி
சூரியன் சட்டக் கல்லூரி (Suriyan Satta Kalloori) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். பவன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்களான கஜ்னி, மித்ரா குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர், இதில் ராதாரவி, பவன், எம். எசு. பாசுகர், கஞ்சா கறுப்பு, ஆரத்தி, காதல் சுகுமார், சாம்ஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். சிவசக்தி பாண்டியன் தயாரித்த இப்படத்திற்கு, தேவாவின் இசை அமைத்தார். படம் 25 செப்டம்பர் 2009 அன்று வெளியிடப்பட்டது.[1] நடிகர்கள்
தயாரிப்புகாதல் கோட்டை (1996) மற்றும் வெற்றிக் கொடி கட்டு (2000) போன்ற படங்களைத் தயாரித்த சிவசக்தி பாண்டியன், அறிமுக இயக்குநர் ஆர். பவன் இயக்கிய சூரியன் சட்டக் கல்லூரி என்ற படத்தை தயாரிப்பதன் மூலமாக நீண்ட காலத்துக்குப் பின்னர் மீண்டும் படம் தயாரிக்கத் துவங்கினார்.[2] படத் தயாரிப்பாளர் காஜா மொகைதீனின் மகன் புதுமுகம் கஜ்னி, மலையாள நடிகை மித்ரா குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். பவன், ராதாரவி, எம். எசு. பாசுகர், கஞ்சா கறுப்பு, ஆர்த்தி போன்ற நடிகர்கள் பிற வேடங்களில் நடித்தனர். யூ. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, தேவா இசை அமைத்தார். படத்தொகுப்பை எஸ். சூரஜ்கவே மேற்கொண்டார்.[3][4][5] இசைதிரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தேவா அமைத்தார். ரீரிகார்டிங் முடிக்க தேவா 21 நாட்கள் எடுத்துக்கொண்டார்.[6] 2009 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவில், கபிலன், ஆர். பவன் எழுதிய ஐந்து பாடல்கள் இருந்தன.[7]
வெளியீடுஇந்த படம் 25 செப்டம்பர் 2009 அன்று நான்கு படங்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டது.[8] வணிகம்இந்தத் திரைப்படம் சென்னை மண்டலத்தில் சராசரிக்கும் குறைவான வசூலைத் துவக்கியது.[9][10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia