செனான் ஈராக்சைடு
செனான் ஈராக்சைடு (Xenon dioxide ) அல்லது செனான்(IV) ஆக்சைடு (xenon(IV) oxide) என்பது XeO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செனான் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் 2011 ஆம் ஆண்டில் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டது. செனான் நான்கு புளோரைடை 0°செ வெப்பநிலையில் ( 2.00 மோல்/லி H2SO4 உடன்) நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி செனான் ஈராக்சைடு தயாரிக்கப்பட்டது.[2] அமைப்புசெனான் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் முறைய 4 மற்றும் 2 என்ற அணைவு எண்களாகக் கொண்ட நீட்டித்த சங்கிலி அல்லது வலை கட்டமைப்பில் செனான் ஈராக்சைடு காணப்படுகிறது. செனானின் சதுர சமதள வடிவியலில் நான்கு ஈனிகள் மற்றும் இரண்டு தனித்த எலக்ட்ரான் இரட்டைகள் வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கைக்கு இசைவாக அமைந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பே குவைய வேதியியல் முறைப்படி பைக்கோ மற்றும் தாம் என்பவர்கள் செனான் ஈராக்சைடின் இருப்பை முன் கனித்து கூறியிருந்தாலும் அவர்கள் இந்நீட்சி அமைப்பு குறித்து அறிந்திருக்கவில்லை.[3] பண்புகள்XeO2 மஞ்சள் – ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது[4]. நிலைப்புத்தன்மையற்ற இச்சேர்மத்தின் அரைவாழ்வுக் காலம் இரண்டு நிமிடங்களே ஆகும் . −78 °செல்சியசு வெப்பநிலைக்கு இதைக் குளிர்வித்து சிதைவடைவதற்கு முன்பு இராமன் அலைமாலையியல் ஆய்வுக்கு உட்படுத்தினால் அமைப்பும் அடையாளமும் உறுதிப்படுகிறது.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia