செனான் நான்காக்சைடு(Xenon tetroxide) என்பது XeO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல்சேர்மமாகும். செனான் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் மந்த வாயுச் சேர்மங்களில் நிலைப்புத்தன்மை கொண்ட சேர்மமாக காணப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் படிகவடிவத் திண்மமான இச்சேர்மம் −35.9 °செ வெப்பநிலைக்கு கீழ் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. இவ்வெப்பநிலைக்கு மேல் இது தலைகீழாக வெடிக்கும் தன்மை கொண்டு சிதைவடைந்து தனிமநிலை செனான் மற்றும் ஆக்சிசனாக மாறுகிறது.[4][5]
செனானின் எட்டு இணைதிறன்எலக்ட்ரான்களும் ஆக்சிசனுடன் பிணைப்பில் பங்கு கொள்கின்றன. இச்சேர்மத்தில் செனானின் ஆக்சிசனேற்ற நிலை +8. ஆகும். ஆக்சிசன் மட்டுமே செனானை அதனுடைய அதிகபட்ச ஆக்சிசனேற்ற நிலையில் வினையில் ஈடுபடுத்துகிறது. புளோரினும் கூட XeF6 என்ற சேர்மமாக (+6) ஆக்சிசனேற்ற நிலையைத் தரமுடிகிறது. செனான் நான்காக்சைடு மற்றும் செனான் அறுபுளோரைடு ஆகியன வினை புரிவதால் XeO3F2 மற்றும் XeO2F4 என்ற ஆக்சிசனேற்ற நிலை +8, கொண்ட சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை குறுகிய வாழ்நாள் கொண்ட சேர்மங்களாகும். அடர்த்திவழி பிரிகை முறையில் XeO3F2 மற்றும் XeO2F4 சேர்மங்களை கண்டறிய இயலும். பெர்செனேட்டு சேர்மங்களிலும் செனான் +8 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.
வினைகள்
இச்சேர்மம் −35.9 °செ வெப்பநிலைக்கு வெடிக்கும் தன்மையுடன் காணப்படுகிறது. இதனால் சிதைவடைந்து செனான் மற்றும் ஆக்சிசன் வாயுக்களாக (ΔH = −643 கியூ/மோல்) சிதைவடைகிறது.
அனைத்து தொகுப்பு வினைகளும் பெர்செனேட்டுகளில் இருந்து தொடங்குகின்றன. இவை செனேட்டுகளில் இருந்து இரண்டு முறைகளில் பெறப்படுகின்றன. செனேட்டுகள் விகிதச்சமமாதலின்றி பிரிகையடைந்து செனேட்டுகள் மற்றும் பெர்செனேட்டுகளாக பிரிகைய்டையும் முறை முதலாவது முறையாகும்.
பேரியம் பெர்செனேட்டுகந்தக அமிலத்துடன் வினைபுரிந்து நிலைப்புத்தன்மையற்ற பெர்செனிக் அமிலம் உருவாகி பின்னர் இது நீர்நீக்கமடைந்து செனான் நான்காக்சைடு உருவாகிறது.:[6]
Ba 2XeO 6 + 2 H 2SO 4 → 2 BaSO 4 + H 4XeO 6
H 4XeO 6 → 2 H 2O + XeO 4
அதிகமாக எஞ்சியிருக்கும் பெர்செனிக் அமிலம் சிதைவடைந்து செனிக் அமிலமாக்வும் ஆக்சிசனாகவும் சிதைவடைகிறது.
↑G. Gundersen, K. Hedberg, J. L.Huston (1970). "Molecular Structure of Xenon Tetroxide, XeO4". J. Chem. Phys.52 (2): 812–815. doi:10.1063/1.1673060.
↑Gunn, S. R. (May 1965). "The Heat of Formation of Xenon Tetroxide". Journal of the American Chemical Society87 (10): 2290–2291. doi:10.1021/ja01088a038.
↑H.Selig , J. G. Malm , H. H. Claassen , C. L. Chernick , J. L. Huston (1964). "Xenon tetroxide -Preparation + Some Properties". Science143 (3612): 1322–3. doi:10.1126/science.143.3612.1322. பப்மெட்:17799234.