செனிக் அமிலம் (Xenic acid) என்பது ஓரு அருமன் வாயு சேர்மமாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு H2XeO4.ஆகும். செனான் மூவாக்சைடு நீரில் கரைந்து செனிக் அமிலம் உண்டாகிறது. இது ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாக விளங்குகிறது. செனிக் அமிலம் சிதைவடைதல் அபாயகரமானது. ஏனெனில் சிதைவின்போது அதிக அளவிளான செனான், ஆக்சிசன், ஓசோன் போன்ற வாயுரூப பொருட்களை வெளியிடுகிறது.
1933 ஆம் ஆண்டில் லினசு பெளலிங் என்பவர் செனிக் அமிலத்தின் இருப்பு தொடர்பான கற்பிதக் கொள்கையை வெளியிட்டார்[1]. கரிம வேதியியலில் செனிக் அமிலம் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.
செனிக் அமிலத்தின் உப்புகள் செனேட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை செனான் வாயு மற்றும் பெர்செனேட்டுகளாக தகவற்று இணைந்துள்ளன.