சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)

சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 11 ஆக இருந்தது. 79-லிருந்து, 86 வரையுள்ள சென்னை மாநகராட்சியின் வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளைக்கொண்டு இத்தொகுதி அமைக்கப்பெற்றது. துறைமுகம், பூங்கா நகர், எழும்பூர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்பிற்குப் பின்னர் இத்தொகுதி நீக்கப்பட்டு விட்டது[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 மு. கருணாநிதி திமுக 50.96
2001 மு. கருணாநிதி திமுக 51.91
1996 மு. கருணாநிதி திமுக 77.05
1991 ஜீனத் ஷர்புதின் இ.தே.காங்கிரசு 50.62
1989 அப்துல் லத்தீப் திமுக 50.21
1984 ரஹ்மான்கான் திமுக 56.26
1980 ரஹ்மான்கான் திமுக 55.64
1977 ரஹ்மான்கான் திமுக 38.40

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya