சௌகத் அலி (அரசியல்வாதி)
மௌலானா சௌகத் அலி (Maulana Shaukat Ali ) (10 மார்ச் 1873– 26 நவம்பர் 1938) இவர் கிலாபத் இயக்கத்தின் இந்திய முஸ்லிம் தலைவராக இருந்தார். இவர் புகழ்பெற்ற அரசியல் தலைவர் முகமது அலி ஜவகரின் மூத்த சகோதரராவார். [1] ஆரம்ப கால வாழ்க்கைஇவர் 1873 ஆம் ஆண்டில் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் ராம்பூர் மாநிலத்தில் பிறந்தார். ஆனால் பின்னர் மத அடிப்படையில் இந்தியாவைப் பிரிப்பதில் பங்கு வகித்தார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இவர் துடுப்பாட்டம் விளையாடுவதை மிகவும் விரும்பினார். பல்கலைக்கழக அணியின் தலைவராகவும் இருந்தார். [2] இவர் பிரிட்டிசு இந்தியாவில் ஐக்கிய மாகாணங்களான அயோத்தி மற்றும் ஆக்ராவின் அரசுப் பணியில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். [1] கிலாபத் இயக்கம்இவர் தனது தம்பி முகமது அலி ஜவகருக்கு உருது வார இதழான அம்தார்ட் மற்றும் ஆங்கில வார இதழான காம்ரேட் என்பதை வெளியிட உதவினார். 1915 ஆம் ஆண்டில் இவர் ஒரு கட்டுரையை வெளியிட்டார். இது துருக்கியர்கள் பிரிட்டிசாரை எதிர்த்துப் போராடுவது சரியானது என்று கூறினார். இந்த இரண்டு வார இதழ்கள் முஸ்லிம் இந்தியாவின் அரசியல் கொள்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தன. [1] 1919 ஆம் ஆண்டில், பிரிட்டிசு தேசத்துரோகப் பொருட்கள் என்று குற்றம் சாட்டியதை வெளியிட்டதற்காகவும், ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ததற்காகவும் சிறையில் இருந்தபோது, இவர் கிலாபத் மாநாட்டின் கடைசித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது (1919-1922) மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரசுக்கு ஆதரவளித்ததற்காக 1921 முதல் 1923 வரை இவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ரசிகர்கள் இவருக்கும் இவரது சகோதரருக்கும் மௌலானா என்ற பட்டத்தை வழங்கினர் . மார்ச் 1922 இல், இவர் ராஜ்கோட் சிறையில் இருந்தார். பின்னர் 1923 இல் விடுவிக்கப்பட்டார். நேருவின் அறிக்கைகாங்கிரசு, அதன் அகிம்சை நெறிமுறைகளின் ஆதரவாளராக இருந்தபோதும், புரட்சிகர சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவை வழங்குவதில் இவர் தனது சில சகாக்களையும் மிஞ்சிவிட்டார். இதற்காக சச்சீந்திரநாத் சன்யாலுக்கு துப்பாக்கிகளை வழங்கினார். [3] இவர் 1928 நேருவின் அறிக்கையை எதிர்த்தார். அதற்கு பதிலாக, இவர் முஸ்லிம்களுக்கு தனி வாக்காளர்களைக் கோரினார். இறுதியாக கிலாபத் குழு நேரு அறிக்கையை நிராகரித்தது. 1930-31ல் இலண்டனில் நடந்த முதல் மற்றும் இரண்டாவது இந்திய வட்டமேசை மாநாடுகளில் இவர் கலந்து கொண்டார். இவரது சகோதரர் 1931 இல் இறந்தார். இவர் தொடர்ந்து ஜெருசலேமில் உலக முஸ்லீம் மாநாட்டை ஏற்பாடு செய்தார். 1936 ஆம் ஆண்டில், இவர் அகில இந்திய முஸ்லிம் லீக்கில் உறுப்பினரானார். பாக்கித்தானின் எதிர்கால நிறுவனர் முகம்மது அலி ஜின்னாவின் நெருங்கிய அரசியல் கூட்டாளியாகவும் பிரச்சாரகராகவும் இருந்தார். இவர் 1934 முதல் 1938 வரை பிரிட்டிசு இந்தியாவில் 'மத்திய சட்டமன்றத்தின்' உறுப்பினராக பணியாற்றினார். இந்தியாவின் முஸ்லிம்களுக்கான ஆதரவையும், இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியில் இருந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தையும் கட்டியெழுப்ப இவர் மத்திய கிழக்கு முழுவதும் பயணம் செய்தார். [1] மரணம் மற்றும் மரபு![]() நவம்பர் 26, 1938 அன்று டெல்லியில் உள்ள கரோல் பாக் என்ற இடத்தில் உள்ள இவரது சகோதரரின் மனைவியின் வீட்டில் காலமானார். இவரது உடல் தில்லியின் ஜாமா பள்ளி அருகே நவம்பர் 28, 1938 அன்று அடக்கம் செய்யப்பட்டது. [4] நினைவு அஞ்சல்தலைபாக்கித்தான் அஞ்சல் துறை 1995 ஆம் ஆண்டில் அதன் 'சுதந்திரத்தின் முன்னோடிகள்' தொடரில் இவரது நினைவாக ஒரு அஞ்சல் தலைப்பை வெளியிட்டது. [2] குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia