ஜி. ராமகிருஷ்ணன்
ஜி. ராமகிருஷ்ணன் (பிறப்பு: சூன் 6, 1949) தமிழக அரசியல்வாதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராவார்[1] வாழ்க்கைக் குறிப்புஇவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், மேமாளூர் கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.[2] கல்வி
அரசியல் வாழ்க்கை1969-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆனார். சென்னையில் படிப்பை முடித்த பின் கடலூரில் 8 ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்னாற்காடு மாவட்டச் செயலாளராகவும், அகில இந்திய நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1981-ம் ஆண்டு முதல் கட்சியின் முழு நேர ஊழியராகப் பணியாற்றி வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யு. வின் தென்னாற்காடு மாவட்டச் செயலாளராகவும், அதன் மாநிலத் துணைத் தலைவராகவும் செயல்பட்டார். இப்போது நெய்வேலி சி.ஐ.டி.யு. சங்கத்தின் கௌரவத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். சிபிஐ(எம்)-ன் தமிழ்நாடு மாநிலச் செயலாளர்2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார்.மணல் கொள்ளை குறித்து அறிக்கை வெளியிட்டதால் அவர் மீது சூலை 25 , 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார் .[3] ஆதாரம்
|
Portal di Ensiklopedia Dunia