ஜூங்கா (திரைப்படம்)
ஜூங்கா (Junga) 2018இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம்[1] இயக்கம் கோகுல். இதில் விஜய் சேதுபதி, சாயீஷா சாகல், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோருடைய நடிப்பும், நகைச்சுவையும் நன்கு பேசப்பட்டது[2][3][4][5][6] இசையமைப்பு சித்தார்த் விபின். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரிஸில் படமாக்கப்பட்டுள்ளது. கதைதாதா ஜூங்காவை (விஜய் சேதுபதி) செயற்கை மோதல் செய்வதற்காக காவல்துறை ஒரு வாகனத்தில் அவரை அழைத்துச் செல்வதிலிருந்து கதை தொடங்குகிறது. உதவி ஆணையாளர் மணிமாறன் (வினோத் முன்னா) மற்றும் துரைசிங்கம் (இராசேந்திரன்) ஆகியோருடன் காவல் வாகனத்தில் செல்லும் போது தனது கதையைத் தொடங்குகிறார் ஜூங்கா. அவர் பொள்ளாச்சியில் பேருந்து நடத்துனராக பணிபுரிகிறார். அவர் தொப்புலியை (மடோனா செபாஸ்டியன்) காதலித்து வருகிறார். இவரது தாத்தாவும், அப்பாவும் சேர்த்து அவர்களுக்கு சொந்தமான "சினிமா பாரடைஸ்" என்ற திரையரங்கத்தை குமாரசாமி செட்டியாரிடம் (சுரேஷ் சந்திர மேனன்) இழந்ததை அவரது தாய் (சரண்யா பொன்வண்ணன்) கூறியதும் அதை மீட்க எண்ணுகிறார். இதற்காக சென்னை சென்று சம்பாதிக்க முயல்கிறார். ஒரு நாள் செட்டியார் தனது திரையரங்கத்தை விற்க முயல்வதை அறிந்து அவரைத் தடுக்கிறார். சொத்தை மீட்க பாரிஸிலிருக்கும் செட்டியாரின் மகள் யாழினியை கடத்தத் திட்டமிட்டு தனது உதவியாளர் யோ யோவுடன் பிரான்ஸ் செல்கிறார். அங்கே ஒரு மாஃபியா கும்பல் யாழினியை கடத்தி செல்கிறது. ஜூங்கா யாழினியை எவ்வாறு அவர்களிடமிருந்து மீட்கிறார், என்பதும், இந்தியா வந்து எவ்வாறு செட்டியாரிடம் பேசி தனது சொத்தை மீட்கிறார். ஏன் காவல் துறை அவரை சுட நினைக்கிறது என்பதுமாக மீதிக்கதை செல்கிறது. நடிகர்கள்விஜய் சேதுபதி—தாதா ஜூங்கா, இவருடைய தந்தை தாதா ரங்கா ,அவருடைய தாத்தா தாதா லிங்கா ஒலித் தொகுப்பு
சித்தார்த் விபின் இசையில் 30 ஆகஸ்ட் 2013 இல் ஆறுபாடல்கள் கொண்ட தொகுப்பு வெளியிடப்பட்டது..[7] லலித் ஆனந்த் அனைத்துப் பாடல்களையும் எழுதி இசையமைத்திருந்தார்.
வெளியீடுதமிழ் நாட்டின் பட உரிமை 12 கோடிக்கு விற்கப்பட்டது.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia