ஜேம்ஸ் காக்னி
ஜேம்ஸ் பிரான்சிஸ் காக்னி (James Francis Cagney Jr.; சூலை 17, 1899 – மார்ச் 30 , 1986)[2] என்பவர் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த நடிகர் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் திரைப்படம் மற்றும் மேடை நிகழ்ச்சிகளிலும் இவர் பங்காற்றினார்.[3] இவரின் பல்வேறு விதமான நடன திறமைகளின் மூலம் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[4] 1931 ஆம் ஆண்டில் வெளிவந்த தெ பப்ளிக் எனிமி, 1932 இல் டேக்ஸி, 1938 ஏஞ்சல்ஸ் வித் டர்டி பேஸ், 1949 வொயிட் ஹீட் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[5] அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் வெளியிட்ட சிறந்த பழமையான ஹாலிவுட் நடிகர்களில் இவருக்கு எட்டாவது இடம் கிடைத்தது.[6] ஒளிப்படக் கருவியின் முன்னால் நடித்த ஆகப் பெரும் கலைஞன் காக்னி என ஆர்சன் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.[7] அனைத்துக் காலங்களிலும் காக்னி சிறப்பான நடிகர் என ஸ்டான்லி குப்ரிக் தெரிவித்துள்ளார்.[8] இவரின் முதல் தொழில்முறை நடன நிகழ்ச்சி 1919 ஆம் ஆண்டில் நடந்தது. 1925 ஆம் ஆண்டில் இவருக்கு முக்கியக் கதாப்பத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்னர் வரை வாட்வில் எனும் நாடகத் திரைப்பட வடிவத்தில் ஒரு நடனக் கலைஞராக, நகைச்சுவை நடிகராக சில ஆண்டுகள் இருந்தார். 1929 ஆம் ஆண்டில் பென்னிம் ஆர்கேட் நாடகத் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார். அதன் முன்னர் சில துணைக்கதாப்பத்திரங்களில் நடித்தார். அதில் அவரின் நடிப்பு வரவேற்பைப் பெற்றது. இவருக்கு கிடைத்த மகிழ்ச்சியான வரவேற்பை அடுத்து வார்னர் புரோஸ். நிறுவனம் வாரத்திற்கு $500 எனும் மதிப்பில் மூன்று வாரங்கள் பணிபுரிய இவரை ஒப்பந்தம் செய்தனர். பின் இந்த ஒப்பந்தமானது ஏழு ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டது. இவரின் ஏழாவது திரைப்படம் தெ பப்ளிக் எனிமி ஆகும். அந்த சமயத்தில் வெளிவந்த மிகச் சிறந்த தொகுதி வேலையாட்கள் திரைப்படமாகப் பார்க்கப்பட்டது. இதில் மே கிளார்க்கின் முகத்தில் திராட்சைப்பழத்தை காக்னி வீசி எறிவது போன்ற காட்சி அதிக வரவேற்பைப் பெற்றது. வார்னர் புரோஸ்.நிறுவன மற்றும் ஹாலிவுட்டின் பெரிய நட்சத்திர நடிகரானார். 1938 இல் ஏஞ்சல்ஸ் வித் டர்டி பேஸ் எனும் திரைப்படத்தில் நடித்தார். இதில் முரட்டுத் தனமான ராக்கி சல்லிவன் எனும்கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். யாங்கீ டூடுல் திரைப்படத்தில் ஜார்ஜ் எம். கோஹன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தக் கதாப்பத்திரத்திற்காக 1942 ஆம் ஆண்டில் அகாதமி விருது பெற்றார்.[9] 1955 ஆம் ஆண்டில் லவ் மீ ஆர் லீவ் மீ எனும் திரைப்படத்திற்காக மூன்றாவது முறையாக சிறந்த நடிகருக்கான அகாதமி விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக நடிப்பு மற்றும் நடனத்தில் இருந்து 1961 ஆம் ஆண்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். பின் இருபது ஆண்டுகள் கழித்து 1981 ஆம் ஆண்டில் ராக்டைம் எனும் திரைப்படத்தில் நடித்தார்.[10] ஆரம்பகால வாழ்க்கைஜேம்ஸ் பிரான்சிஸ் "ஜிம்மி" காக்னி மன்ஹாட்டன், நியூயார்க் நகரத்தில் சூலை 17, 1899 இல்பிறந்தார். இவரின் தந்தை ஜேம்ஸ் பிரான்சிஸ் காக்னி (1875- 1918) அயர்லாந்து மரபைச் சார்ந்தவர். இவர் காக்னி பிறக்கின்ற போது இன்தேறல் (மதுக்கடை) கடைக்காரர் மற்றும் குத்துச்சண்டை வீரராகவும் இருந்தார்[11]. காக்னியின் பிறப்புச் சான்றிதழில் இவர் ஒரு தந்தித்துறையர் என பதிவிடப்பட்டுள்ளார்.[12] இவரின் தாய் கரோலின் (1877- 1945). சான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia