வில் சிமித்
வில்லார்ட் கரோல் சிமித்து II (ஆங்கிலம்: Willard Carroll Smith II)[2] (பிறப்பு: செப்டம்பர் 25, 1968) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், சொல்லிசையாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தனது நடிப்புத் துறை வாழ்க்கையை என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தி பிரெஷ் பிரின்ஸ் ஆப் பெல்-ஏர்' (1990-1996) என்ற ஒரு கற்பனையான தொடரில் மூலம் அறிமுகமானார். இந்த தொடர் முடிந்து விட்டு இவர் தனியாக சொல்லிசை இசைத் தொகுப்புகளை படைக்கத் தொடங்கினார். அதை தொடர்ந்து 1995 களில் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். இவர் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இசை போன்ற துறைகளில் பணிபுரிந்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆவார்.[3] இவரின் சிறந்த பணிக்காக இவர் இதுவரையிலும் அகாதமி விருது, நான்கு கிராமி விருதுகள், கோல்டன் குளோப் விருது, இசுக்ரீன் ஆக்டர்சு கில்ட் விருது, டோனி விருதுகள் மற்றும் பிரதானநேர எம்மி விருதுக்கான பரிந்துரைகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.[4][5][6] இவரது படங்கள் 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் $9.3 பில்லியனுக்கும் மேல் வசூலித்துள்ளன.[7] இவர் சண்டை படமான பேட் பாய்சு (1995), அதன் தொடர்ச்சியான பேட் பாய்சு II (2003) மற்றும் பேட் பாய்ஸ் பார் லைப் (2020) மற்றும் அறிவியல் புனைகதை நகைச்சுவை படங்களான மென் இன் பிளாக் (1997), மென் இன் பிளாக் 2 (2002), மற்றும் மென் இன் பிளாக் 3 (2012) போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்து பரவலான புகழ் பெற்றார். அதை தொடர்ந்து 1996 களில் பரபரப்பூட்டும் படங்களான இன்டிபென்டன்ஸ் டே (1996) மற்றும் எனிமி ஆப் தி ஸ்டேட் (1998) ஆகிய படங்களில் நடித்த பிறகு, 2001 ஆம் ஆண்டில் முகம்மது அலி என்ற கதாபாத்திரத்தில் அலி என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருதைப் பெற்றார். பின்னர் இவர் ஐ, ரோபோ (2004), ஷார்க் டேல் (2004), ஹிட்ச் (2005), த பேர்சுயிட் ஒப் கப்பினஸ் (2006), ஐ ஆம் லெஜண்ட் (2007), ஹான்காக் (2008), செவன் பவுண்ட்ஸ் (2008), ஆஃப்டர் ஏர்த் (2013), சூசைட் ஸ்குவாட் (2016) மற்றும் அலாவுதீன் (2019) போன்ற பல வணிக ரீதியான வெற்றிகரமான படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு டென்னிசு விரான ரிச்சர்ட் வில்லியம்சு என்பவரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து வெளியான 'கிங் ரிச்சர்ட்' (2021) என்ற படத்தில் நடித்ததற்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றார். மற்றும் அகாதமி விருது, பாப்டா விருது, கோல்டன் குளோப் விருது மற்றும் சிறந்த நடிகருக்கான இசுக்ரீன் ஆக்டர்சு கில்ட் விருது ஆகியவற்றை வென்றார்.[8] அத்துடன் 2022 அகாடமி விருது வழங்கும் விழாவில், சிமித்தின் மனைவி ஜடா பிங்கெட் சிமித்தை நகைச்சுவையாளர் கிரிசு ரொக் என்பவர் கேலி செய்ததை அடுத்து, இவர் அகாதமி விழா தொகுப்பாளர் கிரிசு ரொக்கை அறைந்து கூச்சலிட்டதற்காக சிமித்து பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார். பின்னர் இவர் அகாதமி பணியில் இருந்து விளக்கினார், மேலும் ஆஸ்கார் உட்பட அனைத்து அகாடமி விழாக்களிலும் பங்கேற்க பத்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டார்.[9] தனிப்பட்ட வாழ்க்கைவில் சிமித்து 1992 இல் சிறி சம்பினோ என்பவரை மணமுடித்தார். இருவருக்கும் 1992 இல் கார்த்திகை 11 இல் ரெய் சிமித் என்னும் மகன் பிறந்தார். பின்னர் இருவரும் 1995 இல் விவாகரத்து செய்தனர். அதை தொடர்ந்து திசம்பர் 1997 இல் நடிகை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஜேடன் சிமித்து மற்றும் வில்லோ சிமித்து ஆகிய 2 பிள்ளைகள் உண்டு. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia