ஜொகூர் சுல்தானா சரித் சோபியா
ஜொகூர் சுல்தானா சரித் சோபியா (ஆங்கிலம்: Raja Zarith Sofiah binti Sultan Idris Shah; மலாய்: Raja Zarith Sofiah binti Almarhum Sultan Idris Shah) என்பவர் 31 சனவரி 2024 தொடங்கி மலேசியாவின் 17-ஆவது மலேசிய அரசி; மலேசிய அரசர், ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் அவர்களின் மனைவியும் ஆவார். சுல்தானா சரித் சோபியா பேராக் அரச குடும்பத்தில் பிறந்தவர். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள சோமர்வில் கல்லூரியில் படிக்கும் போது, ஜொகூர் அரியணையின் வாரிசான ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தரை மணந்தார். இப்போது ஆறு குழந்தைகளுக்கு தாயான இவர், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பணிகளில் பங்கேற்கிறார்; மேலும் மலேசியாவில் பிரபலமான இஸ்டார் நாளிதழில் கட்டுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.[1][2] பொதுசுல்தானா சரித் சோபியா, பேராக், பத்து காஜா மருத்துவமனையில் 1959 ஆகஸ்டு 14-ஆம் தேதி பேராக் சுல்தான் இட்ரிஸ் சா மற்றும் இராஜா பெரம்புவான் மர்வீன் இராஜா அரிப் சா ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாகவும்; இரண்டாவது மகளாகவும் பிறந்தார்.[1] அவர் தன் தொடக்கக் கல்வியை கோலாகங்சார் டத்தின் கதீஜா தொடக்கப் பள்ளியிலும்; உயர்நிலைப் படிப்பை கோலாகங்சார் ராஜா பெரெம்புவான் கால்சோம் பள்ளியிலும் பயின்றார். இடைநிலைக் கல்வியை முடிக்க இங்கிலாந்து செல்டென்காம் பெண்கள் கல்லூரிக்குச் சென்றார். பின்னர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள சோமர்வில் கல்லூரியில் பயின்றார். மற்றும் 1983-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சீன மொழியில் இளங்கலைப் பட்டத்தையும்; 1986-இல் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.[2][3] பொது வழ்க்கைசுல்தானா சரித் சோபியா, ஜொகூர் மாநில அளவிலும்; தேசிய அளவிலும் பல்வேறு சமூக பொது இயக்கங்களில் சேவை செய்து வருகிறார்.
சுல்தானா சரித் சோபியா, மலேசியாவில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதில் தீவிர ஆதரவாளராக உள்ளார்.[5] மலாய் மொழி மற்றும் ஆங்கிலம் தவிர, இவர் மாண்டரின் மொழி, இத்தாலியம், பிரெஞ்சு மொழி போன்ற மொழிகளில் நன்கு பேசக் கூடியவர். அவர் குனோங் லேடாங் இளவரசியின் புராணக் கதை உட்பட பல குழந்தைகள் புத்தகங்களை எழுதியுள்ளார். மலேசியாவில் இஸ்டார் நாளிதழில் "மனித விசயங்கள்" எனும் பகுதியில் ஒவ்வொரு வாரமும் எழுதி வருகிறார். முன்பு நியூ இஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிலும் எழுதினார். சரித் சோபியா அறக்கட்டளைசுல்தானா சரித் சோபியா மத நடவடிக்கைகளிலும் தீவிரமாக உள்ளார். ஜொகூர் சரித் சோபியா அறக்கட்டளையின் மூலமாக வசதி குறைந்த மாணவர்களுக்கும்; தனித்து வாழும் தாய்மார்களுக்கும் மாநில அளவில் நிதியுதவிகளை, அவரின் கணவரின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறார். இவரின் கடந்த கால சமூகப் பணிகளினால், மாநில அளவிலும் நாடளவிலும் சமூக ஆர்வலராக நன்கு அறியப்படுகிறார். மலேசியாவில் பல்வேறு இன மக்ககளிடம் நன்கு அறியப்பட்ட மலேசியப் பெண்மணியாகவும் பெருமை பெறுகிறார். நூல்கள்ஜொகூர் சுல்தானா சரித் சோபியா எழுதியுள்ள நூல்:
விருதுகள்ஜொகூர் விருதுகள்
மலேசிய விருதுகள்கௌரவ முனைவர் பட்டம்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia