மலேசிய அரசி
மலேசிய அரசி (ஆங்கிலம்: Queen of Malaysia; மலாய்: Raja Permaisuri Agong; ஜாவி: راج ڤرمايسوري اݢوڠ) என்பவர் மலேசிய அரசியலமைப்பின் கீழ் மலேசிய மாமன்னராகப் பொறுப்பு வகிக்கும் மாட்சிமிகு மலேசிய பேரரசரின் துணைவியார் ஆவார். 1957-ஆம் ஆண்டு, பிரித்தானியாவிடம் இருந்து மலாயா கூட்டரசு தன்னுரிமை பெற்ற போது, மலேசிய அரசர் பதவி உருவாக்கப்பட்டது. அரச அமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியரசு நாடான மலேசியாவில், மாமன்னராகத் தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசர், மலேசிய நாட்டின் அரசத் தலைவர் ஆகிறார். மலேசிய அரசியலமைப்பின் கீழ் அவரின் துணைவியார் மலேசிய நாட்டின் பேரரசியாக அறியப்படுகிறார். பொதுமலேசியாவின் பேரரசியை *மாட்சிமிகு இராஜா பரமேசுவரி அகோங்* (ஆங்கிலம்: Her Majesty The Raja Permaisuri Agong; மலாய்: Kebawah Duli Yang Maha Mulia Raja Permaisuri Agong) என்று அழைப்பது வழக்கம். 'பரமேசுவரி' எனும் சொல், சமசுகிருத மொழிச் சொல்லான 'பரமேஸ்வரி' (परमेश्वरी) எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது.[1] 2024 சனவரி மாதம், மலேசிய அரசியை அழைக்கும் மரியாதை அழைமொழி மாட்சிமிகு இராஜா பரமேசுவரி அகோங் என மாற்றம் செய்யப்பட்டது.[2] அழைக்கும் முறைப்பாடுமலேசியப் பேரரசியை மரியாதையாக அழைக்கும் முறைப்பாடு, மலேசியாவில் மிகுந்த அக்கறையுடன் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பேரரசியை அழைக்கும் முறைகள்:
மலேசிய அரசர்மலேசியாவின் ஒன்பது மாநிலங்களின் பரம்பரை ஆட்சியாளர்களிடையே ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஒருவர் மலேசிய பேரரசராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஓர் ஆட்சியாளர் யாங் டி பெர்துவான் அகோங் எனும் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரின் மனைவியும் மலேசிய அரசியலமைப்பின் கீழ் இராஜா பரமேசுவரி அகோங் எனும் மலேசிய அரசியார் ஆகிறார்.[3] இராஜா பரமேசுவரி அகோங் எனும் பட்டத்தை வைத்திருப்பவர் ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாறுகிறார். இருப்பினும் இந்த மாற்றம் மலேசிய பேரரசரின் மரணம் அல்லது பதவித்துறப்பு நடைபெற்ற பின்னரும் நிகழலாம். மலேசிய அரசியலமைப்பில் பேரரசிஇராஜா பரமேசுவரி அகோங்கிற்கு (மலேசிய அரசி) மலேசியாவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட பங்குகள் எதுவும் இல்லை. மலேசிய பேரரசருடன் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டு அரசு பயணங்களில் கலந்து கொள்வார். அத்துடன் மலேசியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்கள்; மற்றும் அவர்களின் துணைவியார்களுக்கு வழங்கப்படும் விருந்தளிப்பு நிகழ்ச்சிகளில் பேரரசியார் கலந்து கொள்வார். மலேசிய அரசியலமைப்பின் 34-ஆவது பிரிவு; மலேசிய அரசி எந்தவொரு நியமனப் பொறுப்புகள் வகிப்பதையோ அல்லது எந்தவொரு வணிக நிறுவனத்திலும் தீவிரமாக ஈடுபடுவதையோ தடைசெய்கிறது. இருப்பினும், மலேசிய அரசிக்கு சட்டப்பூர்வமாக ஆண்டு ஊதியம் மற்றும் படிச்செலவுகள் வழங்கப்படுகின்றன. அவரின் செலவுகள் அனைத்தையும் மலேசிய அரசு ஏற்றுக் கொள்கிறது. மலேசிய பேரர என்ற பட்டத்தை வைத்திருப்பவரின் கணவர் இறந்துவிட்டால், மத்திய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் தகுதியைப் பெறுகிறார்.[4] மலேசிய அரசிகளின் பட்டியல்
மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia