தசாவதாரம் (2008 திரைப்படம்)
தசாவதாரம் (Dasavathaaram), 2008 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பத்து மாறுபட்ட வேடங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நடிக்கும் அசினும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். பாத்திரங்கள்கமலின் பத்து பாத்திரங்கள்
அசின்-கோதை மற்றும் ஆண்டாள் நாகேஷ்-முக்த்தார் கே.ஆர்.விஜயா-முக்த்தாரின் மனைவி மல்லிகா-ஜாஸ்மின் ரகுராம்-அப்பா ராவ் ரேகா-மீனாட்சி கதைக்கோப்புகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. கமல் பத்து பாத்திரங்களில் நடிக்கிறார். அவர்கள் அனைவரும் 2004 சுனாமியோடு எவ்வாறு தொடர்பு படுகிறார் என்பது கதையின் இழை. கதையில் வரும் கமலின் பத்து பாத்திரங்களும் ஒழுங்கின்மை கோட்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய பட்டாம்பூச்சி விளைவு ஆகியவற்றைக் கொண்டு தொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மையக் கதை ஐக்கிய அமெரிக்க நிறுவனம் ஒன்றில் உயிரித் தொழில்நுட்ப அறிவியலாளர் கண்டுபிடித்த உயிரிப் பேரழிவுக் கிருமி தீய சக்திகளுக்குக் கைமாறும் தருவாயில் அதை அவர்களிடம் இருந்து காப்பாற்ற அதை அறிவியலாளர் எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அறிவியலாளரைப் பிடித்து அந்த உயிரியல் அழிவியை எடுக்க சிஐஏ அமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவர் தீவரவாதிகளால் அனுப்பப்படுகிறார். அதற்கிடையில் அறிவியலாளர் எவ்வாறு அந்த அழிவியை நழுவவிடுகிறார், பின் தொடர்கிறார், யார் யாரை சந்திக்கிறார், இறுதியில் 2004 சுனாமிக்கும் அந்த அழிவிக்கும் என்ன தொடர்பு எனபதுவே கதையின் சாரம். சிறப்புக் காட்சிகள்12ம் நூற்றாண்டில் சோழ அரசன், கோவிந்தராசர் சிலையுடன் ரங்கராஜ நம்பியைப் பிணைத்து நடுக்கடலுக்கு எடுத்துச் சென்று வீசும் காட்சிகள், இறுதியில் சுனாமி காட்சிகள் போன்ற சிறப்பு காட்சிகள் அமெரிக்க வல்லுனர் பிறையன் ஜென்னிங்க்ஸ் மேற்பார்வையில் சென்னை வரைகலை, நுட்பக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன. பாடல்கள்
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia